அண்மைய செய்திகள்

recent
-

இந்து கோயில்களை பௌத்த சின்னங்களாக காட்டும் இலக்கில் தொல்பொருள் திணைக்களம் -


இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திருகோணமலை மாவட்டதில் காணப்படுகின்ற தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவது நிரூபனமாகியுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா, இந்துக்கோவிலை உடைத்து, அங்கு விகாரை ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, திருகோணமலை வாழ், தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கிலே இந்து கோயில்களை எல்லாம் அடையாளப்படுத்தி பட்டியல்படுத்தி அதனை பாதுகாக்கப்போகின்றோம் என்று கூறி, அவற்றை மறைமுகமாக சிங்கள பௌத்த சின்னங்களாக காட்டக்கூடிய இலக்கிலே இந்த திணைக்களம் செயற்படுகின்றது.

இது நாட்டிலே மீண்டும் ஒருமுறை வன்முறையை, பிரச்சினையை உருவாக்கும் செயற்பாடாகவே அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்து கோயில்களை பௌத்த சின்னங்களாக காட்டும் இலக்கில் தொல்பொருள் திணைக்களம் - Reviewed by Author on May 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.