அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியோரத்திலுள்ள தொழிற்சாலையினால் சுற்று சூழலுக்கு பாதிப்பு.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியோரத்தில் ஒரே கம்பனிக்கு ஒரே இடத்தில் நான்கு விதமான தொழிற்சாலைக்கான அனுமதி வழங்கியிருப்பதால் அப் பகுதியில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் இப் பகுதியால் போக்குவரத்து செய்யும்போது துர்நாற்றத்துக்கும் முகம் கொடுக்க வேண்டிய
நிலையும் ஏற்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபையின் 14வது மாதாந்தக் கூட்டம் இதன் தவிசாளர்
எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் (14.05.2019) நடைபெற்றபோதே இவ் பிரச்சனை இவ் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது இங்கு தெரிவிக்கையில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் துள்ளுக்குடியிருப்பு நடுக்குடா ஆகிய இடைப்பட்டப் பகுதியில்
வீதியோரத்தில் கூல் மேன் கம்பனி ஒன்று நண்டு பதனிடுதல், ரின் மீன்
அடைத்தல், கோழித்தீன் உற்பத்தி செய்தல் மற்றும் ஐஸ் உற்பத்தி செய்தல்
ஆகிய நான்கு தொழிற்சாலைகளை இதில் இயக்கி வரப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையினால் சுற்றாடலுக்கு மாத்திரமல்ல ஒரு முக்கிய வீதியாக இப் பகுதிக்கூடாக பிரயாணிகள் பயணிக்கின்றபோது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும் இடமாக இது அமைந்திதுப்பது பலராலும் எமக்கு
சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆகவே இது விடயத்தை நேரில் சென்று பார்வையிட்டு இப் பகுதியில் சுற்று
சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இவ்
சபைக்கு இருப்பதனால் இதில் கவனம் செலுத்த வேண்டும்

அத்துடன் இவ் தொழிற்சாலை இங்கு அமைக்கப்பட்ட பின் இப் பகுதியிலுள்ள
காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதாவது இங்கு காடுகளிலுள்ள பச்சை உடை மரங்கள் எல்லாம் நாளந்தம் இவ் தொழிச்சாலையின் தேவைக்காக வெட்டப்பட்டு வருவதால் இப் பகுதி மக்கள் நாளந்தம் காய்ந்த விறகுகளையே பெற முடியாத நிலைக்கு நிலைமை மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இது விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியோரத்திலுள்ள தொழிற்சாலையினால் சுற்று சூழலுக்கு பாதிப்பு. Reviewed by Author on May 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.