அண்மைய செய்திகள்

recent
-

Huawei தொலைபேசிகளின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை நிறுத்தியது கூகுள்


அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரினால் சீனாவின் கையடக்கத் தொலைபேசி சந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமான சீனாவின் ஹூவாவி (Huawei) நிறுவனத்தின் Android தொலைபேசிகளின் செயலிகளில் மேம்படுத்தல்களை மேற்கொள்ள முடியாத வகையிலும் தொழில்நுட்ப உதவிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும் கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே ஹூவாவி தொலைபேசிகளை தற்போது பயன்படுத்துவோர் தொடர்ச்சியாக அந்த அப்களை (App) பயன்படுத்தவும் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற ஹூவாவி கையடக்கத் தொலைபேசிகளில் சில கூகுள் அப்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுவாவி டெக்னொலஜி நிறுவனத்தை வர்த்தக கறுப்புப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு, டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதற்கு ஹுவாவி நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஹுவாவி நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய உத்தரவிற்கு அமைவாக நாம் செயற்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் கூகுள் நிறுவனம் புதிய Android நடவடிக்கை கட்டமைப்பை வௌியிட்டாலும் ஹுவாவி கையடக்க தொலைபேசிகளுக்கு யூரியூப் (Youtube) மற்றும் கூகுள் மெப்ஸ் (Google Map) போன்ற அப்கள் உள்ளடக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஓபன் சோர்ஸின் கீழ் உள்வாங்கப்படாத ஜீமெய்ல், யூரியூப் க்ரோம் போன்ற அப்கள் ஹுவாவி கையடக்க தொலைபேசிகளின் பிளேஸ்ரோரில் (PlayStore) உள்ளடக்கப்படாது.

ஹுவாவி நிறுவனம் கையடக்க தொலைபேசி பாகங்களை சீனாவின் உளவு பார்க்கும் செயற்பாடுகளிக்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் குற்றஞ்சுமத்துகின்றன.

எனினும், ஹுவாவி நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டினை நிராகரித்துள்ளது.

தமது நடவடிக்கைகளால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் தமது நிறுவனம் சீன அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட சுயாதீன நிறுவனம் எனவும் ஹுவாவி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், சில நாடுகள் ஃபை ஜி (5G) கையடக்கத் தொலைபேசி வலையமைப்புக்களுக்காக ஹுவாவி தயாரிப்புகளை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

ஹுவாவி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை காரணமாக அமெரிக்கவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விரிசல் மேலும் வலுவடையலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஹுவாவி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் 24 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்ட ஹுவாவி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி வன்ஷுவோவை அமெரிக்க பாதுகாப்புத் துறையினரின் கீழ் தடுத்துவைப்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் தேவைக்கு அமைய குறித்த அதிகரி கனடாவில் கைது செய்யப்பட்டதுடன் இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கருத்து முரண்பாடு விரிவடைந்தது.

கூகுள் நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைய உலகளாவிய ரீதியில் பயன்பாட்டிலுள்ள Android கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை 2.5 பில்லியனாகும்.


Huawei தொலைபேசிகளின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை நிறுத்தியது கூகுள் Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.