அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-நல்லிணக்கக் கூட்டத்தில் நான்கு மதத் தலைவர்களும் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்காக இறை வேண்டுதல்.

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமயவிவகார அமைச்சின் அனுசரனையுடன் நடைபெற்றுவரும் மன்னார் மாவட்ட நல்லிணக்ககுழு கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (30.04.2019) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தேசிய நல்லிணக்க குழு இதன் நிறைவேற்றுப் இணைப்பாளர்
nஐகான் பெரேரா, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மூர்வீதி பெரிய பள்ளி வாசல் மௌலவி எஸ்.ஏ.அசீம், இந்து மதத்தைச் சார்ந்த தர்மகுமாரக் குருக்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சார்ந்த போதகர் நிமால் கூஞ்ஞ, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஏ.விக்ரர் சோசை அடிகளார், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிறந்த பீரீஸ் உட்பட நகர, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இவ் அமர்வில் கலந்து
கொண்டனர்.

இவ் ஆரம்ப நிகழ்வில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் உயிர்த்த ஞாயிறு தினம்
நடைபெற்ற குண்டு வெடிப்பில் இறந்த மற்றும் காணம் அடைந்தவர்களுக்கான இறை வேண்டுதல் நான்குமத தலைவர்களாலும் நடைபெற்றது.
இங்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவிக்கையில் நாம் நல்லிணக்க செயற்பாடு கொண்ட இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் நாம் இவ் வேளையில் விஷேடமாக மன்றாடுகின்றோம்.

இவ் குண்டு வெடிப்பால் சுமார் 400 பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
இன்னும் பலர் காயப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவ்வாறான பரிதாப
நிலையில் நாம் இந்தவேளையில் இரந்து நிற்பது இறந்தவர்களுக்கு நித்திய
இளைப்பாற்றியையும் காயப்பட்டுள்ளவர்களுக்கு விரைவான சுகமும் கிடைக்க வேண்டும் என்றும் நாம் மன்னாடி நிற்கின்றோம்.

இழந்தவர்கள், காயப்பட்டவர்களின் உறவினர்களுக்காகவும் நாம் இந்தவேளையில் இறைவனிடம் செபித்து நிற்கின்றோம். இவர்களுக்கு இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றோம்.

எமது சமூதாயத்திலே இவ்வாரான தீவிரமான குண்டு வெடிப்புக்கள் நடப்பதனால் எம் மத்தியில் பய உணர்வுகள் ஆட்கொள்ளுகின்றன. இதனால் நாம் பயத்துடன் வாழும் நிலை ஏற்படுகின்றது.

ஆகவேதான் இறைவா நாம் உம்மிடம் வேண்டி நிற்பது எங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்தருளும். நாங்கள் பயமின்றி ஒருவரையொருவர் நம்பி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து நல்லதொரு இணக்கப்பாட்டுடன் வாழ இறைவன் எமக்கு அந்த
நிலையை உருவாக்கித் தந்திட வேண்டுவோம்.

இறைவன் எமக்குத் தந்த இந்த உயிர்களை நாம் பாதுகாத்துக் கொள்ள எமக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய இறைவனிடம் நாம் கையேந்துவோம். இந்த மாவட்ட நல்லிணக்க செயற்பாட்டு கூட்டத்தின் மூலம் எம் மத்தியில் ஒற்றுமை நிலவ இறைவன் எம்மை வழி நடத்துவராக என வேண்டிக் கொண்டார்.

இங்கு இஸ்லாமிய மதம் சார்பாக மௌலவி எஸ்.ஏ.அசீம் தெரிவிக்கையில்
இந்த நாளில் எம் அனைவர் மத்தியிலும் சோதனையையும் வேதனையையும் கவலையையும் வெறுமையையும் ஏற்படுத்தியிருக்கின்ற இந்த நாட்டிலே கடந்த ஒரு வாரத்தையும் தாண்டிய குண்டு வெடிப்புக் காரணமாக அதுவும் ஒரு புனிதமான நாளிலே புனிதமான
இடத்திலே அதுவும் இறைவனை தியானம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்த்திலே கொடியவர்களின் குண்டு வெடிப்பாலே தங்கள் உயிர்களை இழந்து நிற்கும் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும்.

அதேவேளையில்; காயத்துக்கள்ளாகி வைத்தியசாலைகளில் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கும்  எம் உறவுகள் நற்சுகம் அடைந்து நல்லமுறையில் வீடுபோய் சேர வேண்டும் என நாம் இந்த இடத்தில் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

தங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு இறiவா நீர்தாமே ஆறுதலாக இருந்து செயற்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
கடந்த 30 வருட காலமாக நாம் இந்த நாட்டிலே பல துன்பங்களுக்கு உள்ளாகி
பயத்தின் மத்தியில் இருந்து மீண்டு இப்பொழுது மீண்டும் அதே
காலக்கட்டத்துக்கு நாம் திரும்பியுள்ளோம்.

கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள் வரலாற்று ரீதியில் இஸ்லாமிய மக்களின்
விசுவாசத்தின் அடிப்படையில் இவர்களும் இஸ்லாமியருக்கு நெருக்கமான
உறவுகள். நெருக்கமான சகோதரத்துவம் கொண்டவர்கள்.

அந்த அடிப்படையில் சகோதரத்துவத்தை பேணி வளர்க்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே கயவர்களின் மோசமான மதத்தின் பேரால் மார்க்கத்தின் பேரால் மேற்கொண்ட இந்த செயற்பாடானது எமது நல்லிணக்கம் சிதறி போகாது நாம் எமது மாவட்டத்திலே காத்துக் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் அன்றுபோல் இன்றும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று  வாழ்வோம். இவ்வாறான தீய செயலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் இவர்கள் நீதியின் முன் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான குற்றங்களை செய்பவர்களை இந்த நாட்டிலுள்ள இஸ்லாமியர் அரசுடன் சேர்ந்து கண்டு பிடிப்பதில் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றார்கள். ஆகவே நாம் தொடர்ந்து இவ்வாறான நல்லிணத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் எமது மாவட்டத்தில் தொடர்ந்து நல் உறவை வளர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்து சமயக் குருக்கள் தர்மகுமாரக் குருக்கள் இங்கு தெரிவிக்கையில்
நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் இவ் நல்லிணக்க குழு கூட்டம் இங்கு அமைவது மிகவும் சாலச் சிறந்ததாகும். நாம் தொடர்ச்சியாக மத நல்லிணக்கத்தை பேணப்படக்கூடியதாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாம் மதங்களுக்கிடையே மேலும் விரிசலை ஏற்படாவண்ணம் நாம் பார்த்துக் கொள்ள வேண்டியது எமது ஒவ்வொருவரினதும் முக்கிய கடமையாகும்.

தற்பொழுது சமூக வலைத்தளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் தேவையற்ற அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடிய பதிவுகள் இடம்பெறத் தொடங்கும். இது அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் மீண்டும் அமைதியின்மையை ஏற்படக்கூடியதாக ஆகி விடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

ஆகவே நாமும் இந்த விடயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காலத்தின் தேவையாக இருக்கின்றது. மனிதனை மனிதன் கொல்லுகின்ற மிகவும் மோசமான நிலை எம் நாட்டில் மீண்டும் உருவாகியுள்ளது.

அதுவும் கிறிஸ்துவின் உயிர்ப்பு திருநாளிலே நடைபெற்ற இவ்விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியவை. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றார்.









மன்னார்-நல்லிணக்கக் கூட்டத்தில் நான்கு மதத் தலைவர்களும் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்காக இறை வேண்டுதல். Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.