அண்மைய செய்திகள்

recent
-

வவுணதீவு படுகொலை: முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!


மட்டக்களப்பு வவுணத்தீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் பொலிசாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

வவுணதீவு கொலை தொடர்பில், நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

வவுணதீவு படுகொலை: முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு! Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.