அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்ஸீம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு-மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ்

நாங்கள் எந்த ஒரு  சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்ஸீம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன்  பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலம் முஸ்ஸீம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன்   வாழ்ந்து வருகின்றோம்.

ஒரு சிலர் செய்த தீவிர வாத நடவடிக்கையினால் ஒட்டு மொத்த முஸ்ஸீம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு என மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய சமாதான போரவை மற்றும் தொடர்பாடலுக்கான மையம் ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களையும், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் ஒன்றிணைத்து இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை மன்னாரில் உள்ள தனியார் ஹோட்டலில் சமய சகவாழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

இந்த நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நாங்கள் யாரும் எதிர் பார்க்காத நிலையில் துன்பகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தமிழ், முஸ்ஸீம் சிங்களம் என்று இல்லாமல் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் குணமடையவும் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

உலக நாடுகளுடன் பார்க்கும் போது எமது இலங்கை நாடு பல்வேறு வளங்களைக்கொண்ட அழகு மிக்க உண்ணதமான நாடாக காணப்படுகின்றது.

நாங்கள் ஒவ்வெருவரும் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பல்வேறு பாதீப்புக்களையும் இன்னல்களையும் சந்தித்தவர்கள். அதன் கசப்பான மூன்று தசாப்த யுத்தத்திற்கு பிற்பாடு நல்லிணக்கத்துடன் சர்வமதங்களுக்கிடையில்,இனங்களுக்கிடையில் ஒற்றுமையுடன் நமது நாட்டில் வாழ்ந்து வந்தோம்.

நல்லிணக்கத்துடனும்,சமாதானத்துடனும்,ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்த எம் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட தீவிரவாத கொள்கையுடைய குறிப்பிட்ட சிலரின் செயற்பாட்டினால் இன்று பிளவுகள் ஆரம்பித்துள்ளது.

நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்ப்ததிலும் எல்லா முஸ்ஸீம் மக்களையும் சந்தேகக்காண்ணோடு பார்ப்பது தவறு.நாங்கள் நீண்ட காலம் முஸ்ஸீம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் நல் உறவு கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

ஒரு சிலர் செய்த தீவிர வாத நடவடிக்கையினால் ஒட்டு மொத்த முஸ்ஸீம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு.

இந்த தீவிரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் சட்டத்தின் பிடியில் இருந்து தவறினாலும் இறைவனின் பிடியில் அவர்களுக்கான தண்டனைகள் நிச்சையம் உண்டு.

எங்களுடைய கடமை நேரத்தில் கூட மிகவும் விழிர்ப்பாகவும் கவனமாகவும் செயல் பட வேண்டி உள்ளது.

பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது,தமக்கு கிடைக்கப்பெறுகின்ற தகவழின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்கள் கூட அவர்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்றால் மாத்திரமே அவர்களுக்கான பாரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அது தான் நீதியும் நியாயமும் கூட. எங்களுக்கு வௌ;வேறு நபர்கள் வழங்குகின்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் அதனை நல்ல முறையில் பரிசோதனை செய்து அதன் உண்மையை கண்டறிந்து தான் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறி செயற்படுகின்றவர்கள் மாத்திரமே கைது செய்யப்பட வேண்டும்.

நீதி மன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமே தவிர சாதாரண அப்பாவி பொது மக்களை கைது செய்தல் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

எந்த ஒரு இனத்தையும்,மதத்தையும் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் குற்றவாழி இல்லை என்றால் அவரை    கைது செய்து சிறையில் அடைக்கும் போது அவருக்கு கிடைக்கப்பெறுகின்ற தண்டனையும்,அனியாயமும் பாரதூரமாக இருக்கும்.

நாங்கள் எங்கள் மணட்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் சரியான முறையில் தகவல்களை பரிசோதனை செய்து கைது செய்தல்,தடுத்து வைத்தல், நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கின்ற செயல் திட்டங்களை மேற்கொள்ளுதல் தான் மிக பொறுத்தமான விடையமாகும்.நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன,மத ரீதியிலான வன்செயல்கள் மன்னார் மாவட்டத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உரிய தரப்பினருக்கு தேவையான அறிவூறுத்தல்களும்,கட்டளைகளும் வழங்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் இருக்கக்கூடிய அவசர கால சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக இனம், மதங்களுக்கு இடையில் பிரிவினை வாதங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றவர்களை கைது செய்து பல வருடங்களுக்கு தடுத்து வைக்கக்கூடிய கடுமையான சட்டங்கள் நடை முறையில் இருக்கின்றது.

நமது மாவட்டத்தில் ஒற்றுமையினையும், சமாதானத்தையும் சீர் குழைக்கின்ற செயல் திட்டங்களை யாராவது முன்னெடுத்தால் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளும் மிகக் கடுமையானதாகவே இருக்கும்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் என்ற வகையில் மன்னார் மாவட்டத்தில் யாராவது நபர் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டை முன்னெடுக்கும் போது கண்டறியப்பட்டால் அவருக்கு கூடுதலான தண்டனையை பெற்றுக்கொடுக்கப்படும்.

எமது மாவட்டத்தில் இனம்,மதம்,மொழி இன்றி சகோதரர்களாகவும் பிரதேசம் வாழ் மக்கள் என்ற ஒரே  நிலைப்பாட்டுடன் சகோதரத்துவத்துடன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே மக்களின் பாதுகாப்பிற்காக எங்களினால் முடிந்த பணிகளை மேற்கொண்டு வரகின்றோம்.நாங்கள் இனம் மதம் மொழிகளைக் கடந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.






நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்ஸீம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு-மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் Reviewed by Author on May 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.