அண்மைய செய்திகள்

recent
-

திரைப்படங்களை தாண்டி செல்வராகவனுக்கு இப்படி ஒரு ஆசையா?


செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற இவரின் படங்கள் காலத்தை கடந்தும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் இந்த மாத இறுதியில் என்ஜிகே படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதன் ப்ரோமோஷனுக்காக செல்வராகவன் பேட்டி அளிக்கும் போது அதில் அவரிடம் வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏன் இல்லை, கண்டிப்பாக அதில் ஆர்வம் இருக்கின்றது, ஆனால், யாரும் என்னை அதுக்குறித்து அனுகவில்லை, ஒருவேளை இந்த பேட்டி பார்த்த பிறகு அனுகினால் கண்டிப்பாக எடுப்பேன்’ என்று கூறியுள்ளார், இது அவருடைய ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

திரைப்படங்களை தாண்டி செல்வராகவனுக்கு இப்படி ஒரு ஆசையா? Reviewed by Author on May 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.