அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் சுவிற்சர்லாந்தின் தலைநகரில் திறந்து வைப்பு -


தமிழின வரலாற்றை அழிக்க காலம் காலமாக மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நாமறிந்தவையே.
வாழ்விடப் பறிப்பு, தொல்லியல் சான்றுகள் அழிப்பு, நூலக எரிப்பு என இவை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

உலகின் பல்வேறு பாகங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் தமிழினத்திற்கு எதிராகவும், தமிழர் வரலாற்றினை திரிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்து விடுவதில் பல்வேறு தரப்புகள் முனைப்புக்காட்டுகின்றன. இவற்றையும் மீறி வெளிவருபவை மிகச்சொற்ப விடயங்களே.

எம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியின் கைகளில் கையளிக்கப்படாவிடத்து, கரைந்துபோன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க எம்மினமும் சேர்ந்துகொள்ளும் என்பது துயரமான உண்மையே எனும் தவிப்புடன் நேற்றைய தினம் சுவிற்சர்லாந்து பேர்ன்நகர் அமைந்த சைவநெறிக்கூடத்தில் “தமிழர் களறி”ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணிக்கு ஐரோப்பாத்திடலில் சுவிற்சர்லாந்து நாட்டின் கொடி, மூவேந்தர் கொடிகள், நந்திக்கொடி, சைவநெறிக்கூடத்தின் கொடி என்பன பேரிகை முழங்க ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இவற்றை முறையே தாவித் லொயிற்வில்லெர், காராளசிங்கம் விஜயசுரேஸ், தர்மசீலன் கலாமதி, நிவேதன் நந்தகுமார், சின்னத்துரை சிறிரஞ்சன், நடராஜா தர்மசீலன், வினாசித்தம்பி தில்லையம்பலம், நடராசா சிவயோகநாதன் ஆகியோர் கொடிகளை ஏற்றிவைத்தனர்.

இளந்தமிழ் சிறார்கள் தமிழ் நூல்களையும், ஏடுகளையும் எந்திவந்திருந்தனர். புண்ணியமூர்த்தி செல்வம் குழுவினர் மங்கல இசையுடன் நூல்களைக் களரிக்கு எடுத்து வந்தனர்.
தமிழின விடுதலைக்கு உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் மடிந்த உறவுகளுக்கும் ஞானலிங்கேச்சுரத்தில் அமைந்திருக்கும் ஈகைலிங்க நடுகல் முன் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
சமயங்களைக்கடந்து இனமான உணர்வுடன் நடடைபெற்ற இன் நிகழ்வில் உலகப்பொதுறையில் இருந்து கடவுள்வாழ்த்து ஓதப்பெற்று பொது வழிபாடு நடைபெற்றது.

ஆசியுரையினை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் வழங்கினார்கள். மேலும் இந் நிகழ்வில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக அனைத்துலக் செயலகத்தின் வாழ்த்துச் செய்தி வாசித்தளிக்கப்பட்டது. இளையோர்கள் செயல் மதிப்பளிக்கப்பட்டு வரலாற்று ஆவணத்திற்கு ஈகையர்கள் தொகுப்பு விரலியில் அளிக்கப்பட்டது.
“Sri Lanka: 60 Years of Independence and Beyond, Edited by Ana Pararajasingham” நூல் அன்ரன்பொன்ராசா, கணநாதன் ராஜ்கண்ணா ஆகியோரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வரலாற்றைப் பதிவுசெய்வோம் எனும் சொல்மட்டும் பேசாது செயல் வடிவம் பெற்றது உள்ளத்திற்கு நிறைவு தருவதாகவும், தமிழில் மட்டுமல்ல வரலாறு பல் மொழிகளில் சரியாகதிரிவுபடுத்தல் நீங்கி வரவேண்டும் எனும் கருத்தும் இவ்வெளியீட்டில் முன்வைக்கப்பட்டது.
இந்நூலினை பல்சமய இல்லத்தின் தலைவர் தாவித் லொயிற்வில்லெர் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக இந்த நிகழ்வின் போது “பூமாஞ்சோலை” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலாசிரியர் அவர்களது வாழ்க்கை வரலாறும் எடுத்துரைக்கப்பட்டு, ஈழவிடுதலைப் போரில் கைதிகளாக பல் இன்னல் எதிர்கொண்டு நாளும் வாழும் வாழ்க்கை முறை உணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது.

ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழர்களறிபாவலர் அறிவுமதி திறந்து வைத்துள்ளார். அவர் தனது சிறப்புரையில் தமிழர்களின் வாழ்வியல் மாண்பினை எடுத்துரைத்துள்ளார்.
ஒளிமுகம் தோறும் புலிமுகம் எனும் தனது படைப்பினையும் அன்றைய நாள் நினைவுகளையும் மீட்டினார், எங்கள் தலைவன் அந்த முருகனுக்கு அவன் இணையானவன் எனப் பாட்டெழுத அமைந்தஅனுபவத்தையும் மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

தமிழர்களறி ஆவணக்காப்பகத்தின் தாள்கள் அமலா சேரலாதன், ஆதிலட்சுமி சிவகுமார், கனிமொழி ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. கந்தசாமி பார்த்தீபன், பத்மநாதன் கௌரிசங்கர், கஜேந்திரசமர்மா ஆகியோர் தமது வாழ்துரைகளை வழங்கினர்.
நிறைவாக“Structures of Tamil Eelam” A Handbook நூல் அக்கினிப்பறவைகள் அமைப்பால் வெளியிடப்பட்டது. முதற்படியினை மாவீரர்களுக்கு அளித்தனர்.

அடுத்து கந்தசாமி பார்த்தீபன், ஜெயக்குமார் வசந்தமாலா, கலைச்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த மூன்றாம் தலைமுறைச் சமூகமாக விளங்கும் இவர்களது செயற்பாடு அனைவர் உள்ளத்தையும் நிறைத்தது.
ஒரு இனத்திற்கு வழிகாட்டி நிற்பது அதன் வரலாறேயாகும். அதனால்தான்தேசத் தலைமகன் 'வரலாறு எனது வழிகாட்டி" என்றுரைத்தான். ஒரு இனத்தின் உண்மையான வரலாறு அதன் சந்ததிகளுக்கு சரிவர எடுத்துச்செல்லப் படவில்லையாயின் அந்த இனம் இருப்பிழந்து காலவோட்டத்தில் கரைந்துபோய்விடும். எனும் வரிகள் எதிரொலிக்க பலநூறுதமிழர்கள் உள்ளம் நிறைய நிகழ்வு நிறைந்தது.
தமிழர்களின் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் சுவிற்சர்லாந்தின் தலைநகரில் திறந்து வைப்பு - Reviewed by Author on May 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.