அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்- இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணையை பகிர்ந்தளிக்க நேர்முகத்தேர்வு-

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திடம் கையளிக்கப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணையை பகிர்ந்தளிப்பது தொடர்பான நேர்முகத்தேர்வு இன்று வியாழக்கிழமை 09-05-2019 காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த வெள்ளாங்குளம் பண்ணையில் சுமார் 264 ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் அண்மையில் இராணுவத்தினரினால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

-குறித்த பண்ணையினை முன்னால் போராளிகள் மற்றும் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

-இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை 09-05-2019 காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் , மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் நேர்முகத்தேர்வு இடம் பெற்றது.

குறித்த நேர்முகத்தேர்விற்கு முன்னால் போராளிகள்,யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள், யுத்தத்தினால் கணவனை இழந்து பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் என சுமார் 357 பேர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

-நேர்முகத்தேர்வு இடம் பெற்றுள்ள நிலையில் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வெள்ளாங்குளம் பண்ணையில் காணிகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் தெரிவித்தார்.குறித்த பண்ணையை விடுவித்து பாதீக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.







மன்னார்- இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணையை பகிர்ந்தளிக்க நேர்முகத்தேர்வு- Reviewed by Author on May 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.