அண்மைய செய்திகள்

recent
-

இலட்சக்கணக்கான புதிய வைரஸ் இனங்கள் சமுத்திரங்களில் கண்டுபிடிப்பு -


பூமியில் அனைத்து வகையான பகுதிகளிலும் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

அதேபோன்று வைரஸ்களும் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கின்றன.
அவ்வாறே சமுத்திரங்களில் 15,000 வரையிலான வைரஸ்கள் இருக்கின்றன என முன்னர் கண்றியப்பட்டிருந்தது.

எனினும் தற்போது சுமார் 195,728 வைரஸ் இனங்கள் சமுத்திரத்தில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வைரஸ்கள் வெற்றுக் கண்களுக்கு தெரியாத போதிலும் சமுத்திரத்தில் இத்தனை வகையான வைரஸ்கள் காணப்படுகின்றமை ஆச்சரியமூட்டுவதாக ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளரான மத்தியூ சுலைவான் தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான புதிய வைரஸ் இனங்கள் சமுத்திரங்களில் கண்டுபிடிப்பு - Reviewed by Author on May 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.