அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட யூபிலி விழாவை முன்னிட்டு நிகழ்வுகள்-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு பூர்த்தி யூபிலியை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வகள் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் FSC தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றது. 10-06-2019  திங்கட்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மாணுவல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் பாடசாலையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

-அதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பு இடம் பெற்றது.தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மாணுவல் பெர்ணான்டோ ஆண்டகை,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் K.J.பிரட்லி உற்பட அருட்தந்தையர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவ,பொலிஸ் அதிகாரிகள் பழைய மாணவர்கள் என பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 இன்று திங்கட்கிழமை10-06-2019 தொடங்கி அடுத்தவருடம் ஜீன் 10 ஆம் திகதி வரை யூபிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி ஒரு வருடம் பல்வேறு பட்ட கலை கலாச்சார பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

குறிப்பாக விசேட இரத்ததான நிகழ்வு, பொது சிரமதான பணிகள் முதியோர் இல்ல தரிசிப்பு மாபெரும் நடைபவணி , ஆசிரியர் உபசரிப்பு  நிகழ்வு மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இறுதி நாள் நிகழ்வில் விசேட கலை நிகழ்வுகள் உட்பட பரிசளிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வருட யூபிலி விழாவை முன்னிட்டு நிகழ்வுகள்-படங்கள் Reviewed by Author on June 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.