அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மருதமடு ஆடி மாத உட்சவம்23.06-2019-பக்தர்கள் நலன் கருதி பலத்த பாதுகாப்பு...

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள மடு ஆலய ஆடி மாத உற்சவத்தின் பாதுகாப்பு நோக்கி மடு ஆலயம் வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களை சோதனையிடுவதற்கு ஐந்து இடங்களை தெரிவு செய்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருவிழா காலங்களில் 450 பொலிசாரை ஆலயப் பகுதியிக்குள் சேவையில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னையின் வருடாந்த பெருவிழாக்களின் ஒன்றான ஆடி மாத பெருவிழா எதிர்வரும் 23 ந் திகதி (23.06.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.7.2019 அன்று திருவிழாவுடன் நிறைவு பெற இருக்கின்றது.

இவ் விழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இதற்கான ஒழுங்குகள் விடயமாக திங்கள் கிழமை (10.06.2019) ஆரயப்பட்டது.

இக் கூட்டத்தில் மன்னார் ஆயர், மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை
அடிகளார், குரு முதல்வர் அருட்பணி. ஏ.விக்ரர் சோசை அடிகளார், அரசு, அரசு
சாபற்ற நிறுவன முக்கியஸ்தர்கள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், கத்தோலிக்க விவகார அமைச்சின் அதிகாரி உட்பட பலர் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் மடு பொலிஸ் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் இன்றைய சூழலில் மடு ஆலய பெரு விழாவை முன்னிட்டு பாதுகாப்புக்கான நோக்கத்தில் மடு ஆலயத்துக்கு வரும் பக்தர்களை பரிசோதனை செய்வதற்காக ஐந்து இடங்களை தெரிவு செய்துள்ளோம்.

அதாவது மடு ஆலய வீதியில் ஒன்பதாம் மைல் போஸ்ட் பகுதியில் ஒன்றும்,
அடம்பன் மடு ஆலய வீதியில் ஒரு சோதனை சாவடியும், பாலம்பிட்டி மடு ஆலய வீதியில் ஒரு சாவடியும், பெரிய பண்டிவிரிச்சான் மடு ஆலய  வீதியில் ஒரு சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு பரிசோதனைகளுக்குப் பின் இவர்கள் ஆலய வளாத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் ஆலயத்துக்குள்ளும் வழிபாடு நடக்கும் இடங்களுக்கு செல்லும்
பக்தர்கள் ஒரு வழி பாதையூடாக உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள் செல்வதற்கான ஆய்த்தங்களை மேற்கொள்ளப்பட இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

மற்றும் வாகனங்கள் தரிப்பிடங்கள் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து
சபையினர் பொலிசார், மடு பிரதேச செயலாளர் இவர்களுடன் மடு பரிபாலகர்
இணைந்து தகுந்த இடங்களை தெரிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கியஸ்தர்களுக்கான வாகன பாஸ்  மன்னார் மாவட்ட செயலகத்தினூடாக
வழங்கப்படும் எனவும் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மருதமடு ஆடி மாத உட்சவம்23.06-2019-பக்தர்கள் நலன் கருதி பலத்த பாதுகாப்பு... Reviewed by Author on June 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.