அண்மைய செய்திகள்

recent
-

450 மில்லியன் டொலர் டா வின்சி ஓவியத்தின் உரிமையாளர் இவரா? மர்மம் விலகியது -


லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றை 450 மில்லியன் டொலருக்கு கைப்பற்றிய நபர் தொடர்பில் தற்போது மர்மம் விலகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான “Salvator Mundi” என்ற ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது.
இந்த ஓவியத்தை சாதனை விலைக்கு பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியானது.
சுமார் 450 மில்லியன் டொலர் தொகைக்கு விலைபோன அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
ஆனால் இறுதி வரையில் அந்த மர்ம நபர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் சகல வசதிகளும் கொண்ட உல்லாசப்படகில் பாதுகாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
500 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியமானது இளவரசர் சல்மானின் பெயரில் இன்னொரு சவுதி இளவரசர் வாங்கியதாக பிரபல பத்திரிகை அப்போதே தகவல் வெளியிட்டது.
ஆனால் அந்த தகவலை குறித்த ஓவியத்தை ஏலம் நடத்திய நிறுவனம் மறுத்திருந்தது. தற்போது எகிப்தில் உள்ள கடற்கரை நகரம் ஒன்றில் இளவரசர் சல்மானின் படகு நிறுத்தப்பட்ட நிலையில்,

அதனுள் டா வின்சியின் Salvator Mundi ஓவியம் இருப்பதை தனியார் ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
உப்பு கலந்த கடற்காற்று 500 ஆண்டுகள் பழமையான அந்த ஓவியத்திற்கு உகந்தது அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
450 மில்லியன் டொலர் டா வின்சி ஓவியத்தின் உரிமையாளர் இவரா? மர்மம் விலகியது - Reviewed by Author on June 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.