திருக்கேதீஸ்வரம் ஆலயம் வளைவு அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை  வழங்கியிருந்த  இரத்து செய்திருந்தது இது தொடர்பான கலந்துரையாடல் திருக்கேதீஸ்வரத்தில் இன்று (23) காலை பத்து மணியளவில் நடை பெற்றது இதன் போது இந்த கருத்தினை வெளியிட்டார்
திருக்கேதீஸ்வரம் தொடர்பான பிரச்சனை இன்று நேற்று அல்ல பல காலமாக நடைபெற்று வருகிறது அதில் ஏகப்பட்ட விட்டுக் கொடுப்புகளை செய்து விட்டோம் ஏனெனில் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற றீதியில் ஆனால் சகோதர மத மக்கள் எம்மை அப்படி பார்த்ததில்லை
லூர்து அன்னை ஆலயம் அமைக்கப்பட்தில் கூட பல நிர்வாக சிக்கல்கள் உள்ளது நாங்கள் அதை ஒன்றும் கேட்கவில்லை நாங்கள் கேட்டது எமது ஆலயத்திற்கு செல்லும் வீதியில் அலங்கார வளைவு ஏற்கனவே உரிய தினைக்களத்தினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது மன்னார் பிரதேச சபையும் அனுமதி வழங்கி காலாவதியானதையே புதுப்பித்து கேட்டிருந்தோம் அதுமட்டும் அல்லாது ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் இருந்து 85 அடிக்கு பின்னால் கட்டுவதற்கு சம்மதித்து இருக்கிறோம் இதைவிட எவ்வாறு விட்டுக் கொடுப்பது  உண்ணாவிரதங்களும் போராட்டங்களும் செய்தால்தான் ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றாம் அதற்கும் இந்துக்களாகிய நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் இணைச் செயலாளர் எஸ்எஸ. இராமகிருஷ’ணன் தெரிவித்தார்
திருக்கேதீச்சர வளைவு இர 85 அடிக்கு பின்னால் கட்டுவதற்கு சம்மதித்தும் மீண்டும் தடை , இதைவிட எவ்வாறு விட்டுக் கொடுப்பது -திருக்கேதீச்சர  ஆலயத்தின் இணைச் செயலாளர்