அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வரலாற்று புகழ் மிக்க திருக்கேச்சர அலங்கார வளைவு அமைக்க இடைக்கால தடை விதித்துள்ள மன்னார் பிரதேச சபை

 

மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி மீண்டும் இடை நிறுத்தம்-

மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் உத்தரவு-(படம்)

-மன்னார் நிருபர்-
(22-06-2019)

மன்னார் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை வழங்கி இருந்த அனுமதியை மன்னார் பிரதேச சபை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,,,,,

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேச சபை எல்லைக்குள் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இவ்விடையம் தொடர்பில் கலந்துரையாடலை ஏற்படுத்தி சுமூகமான தீர்வினை ஏற்படுத்தும் வரை என்னால் வழங்கப்பட்ட அனுமதியானது தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்படுகின்றது என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் தோரண நுழைவாயில் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உருப்பினர்கள் அனைவரும் இணைந்து திருக்கேதீஸ்வரத்திற்கான தோரண நுழைவாயில் அமைப்பதற்கு அனுமதியை வழங்கிய நிலையில், மன்னார் பிரதேச சபையினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதே வேளை மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாந்தை சந்தியில் எந்த ஒரு மதப்பிரிவினுடைய தோரண நுழைவாயில்களும் அமைப்பதற்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும், தற்போது வரை எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று இருக்க வேண்டும் எனவும் எவ்வித அனுமதியும் வழங்க கூடாது என நானாட்டான் பிரதேச சபையின் அமர்வின் போது தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபை தமிழ் கூட்டமைப்பு வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது 
நானாட்டன் பிரதேச சபையின் 16 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை (20) இடம் பெற்றது. 

இதன் போது குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் ஜெயானந்தன் குரூஸ் சபையில் முன்வைத்தார்.

இதன் போது உறுப்பினர் ஒருவர் குறித்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மேலும் ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.


இந்த நிலையில் வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் சபையின் 14 உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.


மன்னார் வரலாற்று புகழ் மிக்க திருக்கேச்சர அலங்கார வளைவு அமைக்க இடைக்கால தடை விதித்துள்ள மன்னார் பிரதேச சபை Reviewed by Admin on June 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.