அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலே எந்த விதமான நல்லிணக்கமும் ஏற்படவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை

நல்லிணக்க செயல் பாடுகளினூடாக இந்து மக்களுக்கு மன்னாரிலே எந்த விதமான நல்லிணக்கமும் ஏற்படவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள்

(மன்னார் நிருபர்)

(28-06-2019)

ஒரு பிரச்சினையை பேசி தீர்ப்பதன் மூலம்  இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னாரிலே பல காலமாக விட்டுக் கொடுப்புக்களுடனும், பல்வேறு அர்ப்பனிப்புடனும் வாழ்ந்து வருகின்றோம் என மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை(28) காலை மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் இடம் பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் உப தலைவர் கருணாநந்த குருக்கள்,செயலாளர் மனோ ஐங்கர சர்மா மற்றும் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டு பின் மீண்டும் அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக நாம் சில கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய அனுமதியானது  பல்வேறு கால கட்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் எமக்கு  'தோரண நுழைவாயில்' அமைக்க மன்னார் பிரதேச சபையினால் உத்தியோக பூர்வமான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

கடிதம் வழங்கப்பட்டு ஒரு சில நாற்களில் குறித்த அனுமதி மீண்டும் இரத்துச் செய்யப்படுவதாக மன்னார் பிரதேச சபையினுடைய தலைவரின் ஒப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த செயற்பாடு இந்து மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.குறித்த அனுமதியை உடன் இரத்துச் செய்யக்கோரி பிரதேச சபையின் தவிசாளருக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரையோகிக்கப் பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

நாங்கள் சமாதான பேச்சுக்களுக்காக பல தடவைகள் பலருடைய முயற்சிகளுக்கு அப்பால் நாங்கள் ஒரு இனக்கப்பாட்டிற்கு ஒரு விடையத்தை பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் நல் என்ன சமிஞ்ஞையை காட்டியிறுந்தோம்.

அது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவித்த எங்களுடன் சந்தித்த அந்த அமைப்புக்களின் பிரதி நிதிகள் யாவரும்   சந்தித்து அவர்களுடைய நேரங்களுக்கு அமைய எங்களை தயார் செய்திருந்த போதும் கடைசி நேரத்தில் கை கூடாமல் போனது துரதிஸ்டவசமானது.

சமாதானம், சமாதானம் என்று நீண்ட நாற்கலாக நாங்கள் மன்னார் மண்ணில் இருந்து கொண்டு பல்வேறு பட்ட தரப்புக்கள் ஊடாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.

பல நல்லிணக்க செயல்பாடுகன் ஊடாக சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால் நல்லிணக்க செயல் பாடுகளினூடாக இந்து மக்களுக்கு மன்னாரிலே எந்த விதமான நல்லிணக்கமும் ஏற்படவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை.

திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் உடைப்பு சம்மந்தமாக ஒரு இனக்கப்பாட்டின் அடிப்படையில் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை சர்வமத பேரவையில் இருந்தும், சர்வமத செயற்பாடுகளில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தோம்.

ஆனால் நாட்டிலே ஏற்பட்ட திடீர் அனர்த்த செயற்பாட்டின் காரணமாக சில சமூகங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையிலே நாங்கள் சில சந்தர்ப்பங்களிலே இணைந்திருந்தோம்.

ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு யாரும் முன் வருவதற்கு தயார் இல்லை. ஏன் சர்வமத பேரவை கூட இந்த விடையத்தில் அக்கரை இன்றி செயற்படுகின்றமையினை நாங்கள் உணர்கின்றோம்.

மன்னார் மாவட்டத்திலே தொடர்ச்சியாக இந்துக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.இந்துக்கள் அடக்கப்படுகின்றமைக்கு கத்தோழிக்கத்தில் இருக்கின்ற அனைவரையும் நாங்கள் குறை கூறவில்லை.

 நிறைய கத்தோழிக்க அன்பர்கள் இந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயிலை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற ஆதரவையும் கருத்துக்களையும் எமக்கு கூறி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில அன்பர்களும்,ஒரு சமூகம் சார்ந்த மதவாதத்தை தூண்டக்கூடியவர்களும் இணைந்து இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது ஆயர் இல்லம் கூட இந்த விடையத்தில் எமக்கு ஒரு முழுமையான நல்லிணக்க சமிஞ்ஞையை இது வரை காட்டவில்லை.

நாங்கள் அவர்களுடன் பேச பல முறை தயார் என அறிவித்த  போதும் இவ்விடையம் தொடர்பில் இவர்கள் சமரசம், இனக்கப்பாட்டிற்கு வரவில்லை.

ஒரு பிரச்சினையை பேசி தீர்ப்பதன் மூலம்  இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னாரிலே பல காலமாக விட்டுக் கொடுப்புக்களுடனும், பல்வேறு அர்ப்பனிப்புடனும்   வாழ்ந்து வருகின்றனர்.

-நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக ஒட்டு மொத்தம் பயந்தவர்களாக இல்லை.எங்களுடைய வாழ்வில் நினைக்கின்றோம் 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் தர்மம் மறுபடியும் வெல்லும்' என்கின்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

-எனவே திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் மீண்டும் அமைக்கப்படும் வரை மதம் சார்ந்த கத்தோழிக்க அமைப்புக்கள் சார்பாக அவர்களினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற சகல நிகழ்வுகளையும் நாங்கள் இன்று முதல் புறக்கணிப்பதாக தீர்மானித்திருக்கின்றோம்.

சமாதானம்,சக வாழ்வைப்பற்றி கதைக்கின்றார்கள்.ஆனால் திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் தொடர்பாக கதைப்பதில்லை. ஆக்க பூர்வமான முடிவுகளையும் எடுப்பதில்லை.

சர்வமத பேரவையில் இருந்து வெளியேறி நீண்ட மாதங்களாகின்றது. ஆனால் இது வரை எந்த வித சர்வமத பேரவையைச் சேர்ந்தவர்களும் உத்தியோகபூர்வமாக இந்துக் குருமார்களை சந்தித்து சர்வமத பேரவையில் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும் என்று எவ்வித கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைக்கவில்லை.

-இந்த காரணத்தினால் நாங்கள் அரச, அரச சார்பற்ற மதம் சாராத நிறுவனங்கள் தவிர்ந்த மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற சகல சர்வ மதம் சார்ந்த சகல மத நல்லிணக்கம் சார்ந்த நிகழ்வகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவுள்ளோம்.

 திருக்கேதீஸ்வர ஆலயத்தினுடைய தோரண நுழைவாயில் அமைக்க மீண்டும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.

இதற்கு ஓர் தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும்.நாங்கள் விட்டுக்கொடுப்போடும்,ஒரு சகிப்புத் தன்மையோடு உண்மையாக மனதில் இருந்து வார்த்தைகள் வர வேண்டுமே தவிர பொய்யாகவும்,வெளி உலகிற்கு காட்டுவதற்காகவே நாங்கள் வெருமனமே நல்லிணக்கத்தோடு இருக்கின்றோம் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரிலே எந்த விதமான நல்லிணக்கமும் ஏற்படவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை Reviewed by Admin on June 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.