அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மத நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றி -திருக்கேதீச்சர வளைவு கட்ட அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை

ஈழத்தில்  இரு கோவில்களே பாடல்கள் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியவை அவையாவன திருக்கோணேஸ்வரம் மற்றது திருக்கேதீச்சரம்
வரலாற்று புராதன கோவில்களில் ஒன்றான    திருக்கேதீச்சர கோவில் வளைவு தொடர்பான சர்ச்சை அண்மையில் அனைவருக்கும்  அதிவலையை ஏற்படுத்திஇருந்தது

இப்பொழுது அந்த சர்ச்சை மத நல்லிணக்தின் அடிப்படியில் முடிவுக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியது

 இலங்கையில் மதவன்முறைகள் மக்களை அழிவு பாதையில் இட்டு செல்லும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் செயற்பாடு அனைத்து மதத்தவர்களையும் பாரட்ட வைத்துள்ளது.

திருக்கேதிஸ்வர வளைவை  நிரந்தரமாக  அமைப்பதற்கு தவிசாளர் உட்பட 10 முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் 12 கத்தோலிக்க உறுப்பினர்களும் ஒரு இந்து உறுப்பினரும் கூட்டாக இணைந்து அனுமதியை வழங்கியுள்ளர் இந்த விடயம் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக  மன்னார் மாவட்டத்தை சேர்ந்த புத்திஜுவி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் முள்ளிவாய்க்கள் யுத்தத்தின் பின்னர் மன்னாரில் மதவாதம் சில அரசியல்வாதிகளாலும், மத தலைவர்களின் தலமையில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இன்று மன்னார் பிரதேச சபையின் இந்த செயற்பாடு மன்னார் மாவட்டத்தின் நல்லிணக்கத்தின் ஆரம்ப பள்ளியாக உள்ளது. இவ்வாறு சகல மத தலைவர்களும் மக்களும் இணைத்து மன்னார் மாவட்டத்தை முன்னேற்றமான பாதையில் ஈட்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்


மன்னாரில் மத நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றி -திருக்கேதீச்சர வளைவு கட்ட அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை Reviewed by Admin on June 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.