அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசத்தில் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள்....


மன்னார் பிரதேசத்தில் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள்

மன்னார் மாவட்டமானது மிகவும் பழமையானதும் புதுமையானதுமான சிறிய மாவட்டம் பல விடையங்களை தன்னகத்தே கொண்டது பலரும் பல மேடைகளில் பேசும்போது பின்தங்கிய மாவட்டம் வெப்பமான மாவட்டம் என்று குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் மேற்குறித்த ஒரு விடையத்தினை ஏற்றுக்கொள்ளலாம் வெப்பமான மாவட்டம் தான் அது குறையல்ல சுழலியல் அமைவு.
மன்னாரில் என்ன இருக்கின்றது. என்று கேட்போரிடம் என்ன இல்லை என்று கேட்க வேண்டும் எல்லா வளமும் உள்ளது பெற்றோலியம் உப்பு வளம் மீன்புடி விவசாயம் பாரம்பரிய கலைகள் நாடகநாட்டுக்கூத்துக்கள் உடக்குபாஸ் கல்வியிலும் கால்பந்திலும் இன்னும் நிறைய விடையங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்…
இங்கே எடுத்துச்சொல்ல வந்த விடையம் மன்னார் மண்ணின் இருந்து மங்கி மறைந்தும் மறந்து கொண்டும் அழிந்து கொண்டும் இருக்கின்ற ஓலைச்சுவடிகள் ஏடுகள் தொடர்பான தேடலில் தொகுப்பே..

மன்னார் பிரதேசத்தின் தலைமன்னார் தொடங்கி பறப்பாங்கண்டல் வரையுமான கிராமங்கிளில் எனது தேடலை ஆரம்பித்தேன் அத்தேடல் முழுமையானது என்று சொல்ல முடிய வில்லை என்பது கவலையான விடையம்தான் ஆனாலும் இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமுள்ளது.
ஓலைச்சுவடிகள் என்பது அச்சுஇயந்திரம் தற்போது உள்ள தொழிநுட்ப வசதிகளற்ற காலப்பகுதியில் எமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட சிறப்பானதொரு ஊடகம் அதாவது சைகை-வாய்மொழி-கேட்டல் கதைசொல்லுதல் மூலம் இருந்த பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துசொல்வதற்காக எழுதிவைக்க களிமண்தட்டு கல்வெட்டு பைரஸ் புல் மற்றும்  சுவடிகள்(பனையோலையில் எழுதப்பட்டவை) தமிழர்களின் அதிகப்பாவனையாக இருந்தது ஓலைச்சுவடிகள் ஆகும்.

இவ்ஓலைச்சுவடிகள் மூலம் எமது முன்னோர்களின் அறிவு ஆளுமை காதல் வீரம் பண்பாடு கலாச்சாரம் வாழ்வியலை  தற்காலத்திலும் அறிய முடிகின்றது கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் தான்.

மன்னார் மாவட்டத்திலும் ஓலைச்சுவடிகள் அதிகமாக இருந்து அழிந்துகொண்டிருக்கும் நிலையில் மன்னார் பிரதேச செயலகத்திற்குள் உள்ள கிராமங்களில் இருந்த ஓலைச்சுவடிகள் இருப்பதை வெளியில்கொணர்ந்து தெரியவைப்பதற்கான சிறுமுயற்சி…..

ஓலைச்சுவடிகளின் வகைகள்
  • நாடக நாட்டுக்கூத்து ஓலைச்சுவடிகள்
  • மருத்துவ ஓலைச்சுவடிகள்
  • மாந்திரிக ஓலைச்சுவடிகள்
  • வாழ்க்கை குறிப்பு ஓலைச்சுவடிகள்
  • சரித்திர குறிப்பு ஓலைச்சுவடிகள்
  • வரலாற்று ஓலைச்சுவடிகள்

மொழிகள்
ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் தமிழ்மொழியில் இருந்தாலும் ஏனைய மொழிகளிலும் இருக்கலாம் மன்னாரில் ஒரு ஏடு பாளிமொழியில் உள்ளது.

எழுதும் முறை
நன்கு தேர்ந்தெடுத்த பனையோலைகளில் எழுத்தணி கொண்டு எழுதி கொவ்வை இலைச்சாற்றில் மையிடுவார்கள் குற்றுப்போட மாட்டார்கள் குற்றுப்போட்டால் ஓலைச்சுவடிகள் கிழிந்துவிடும் வேறுகாரணமும் இருக்கலாம் ஓலைச்சுவடிகள் நீளத்தினைப்பொறுத்து ஒன்று இரண்டு துளைகள் இட்டு நூல் கோர்த்து கட்டிவைப்பார்கள் மிகவும் பாதுகாப்பாக…

மன்னாரில் ஓலைச்சுவடிகள்
மன்னாரில் ஓலைச்சுவடிகள் எனும் போது இருபெரும் பிரிவுகளாக நகரப்பகுதி கிராமப்பகுதி ஆகவுள்ளது நகரப்பகுதியில் ஓலைச்சுவடிகள் இருப்பது குறைவு கிராமப்பகுதிகள் ஓலைச்சுவடிகள் அதிகமாகவுள்ளது இரண்டு பகுதிகளிலும் ஓலைச்சுவடிகள் இருந்தாலும் தற்போது பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளது நிஜமாகின்றது…..

மன்னாரில் ஓலைச்சுவடிகள் அழிவுக்கு காரணம்….
•    யுத்தம்
•    இடப்பெயர்வுகள்
•    திட்டமிட்ட அழிப்பு
•    களவு எடுத்து விற்றல்
•    பயத்தின் காரணமாக எரிப்பு
•    பறிப்பும் கடத்தலும்
•    அக்கறையின்மையினால்(கறையான்-எலி-தண்ணீர்;-மழை புயல்-சூறாவளி போன்றவற்றினால் பாதிப்பு)
•    பழைமையான ஓலைச்சுவடிகள் பாதுகாத்தவரின் இறப்புக்கு பின் அவரோடு சேர்ந்து புதைத்தல் எரித்தல் உண்மையாக நடந்துள்ளது)
இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளால் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டதும் போக மீதியாகவுள்ள சில ஏடுகளினையும் இன்னும் அதைப்பாதுகாத்து வருபவர்களையும் எண்ணிப்பார்க்கும் போது வியப்பாகவுள்ளது.

 பாரம்பரியத்தினை பாதுகாத்து பராமரிப்பவர்களை அடையாளப்படுத்துவதே எனது கட்டுரையின் இன்னுமொரு நோக்கம்.
  • திரு.இறம்மிகேல் யக்கோபு சேரம்(யக்கோப்பிள்ளை) மறைபோதகரும் ஆய்வாளருமாகிய இவர் ஊர் ஊராக சென்று கிட்டத்தட்ட 14ஏடுகளை பறப்பாங்கண்டல் கூட்டத்துமாதா ஆலயத்தில் கண்ணாடிப்பெட்டியில் பாதுகாத்து வைத்துள்ளார்.
  • திரு.சித்தமருத்துவகலாநிதி மகேந்திரன் அவர்கள் 43 வருடங்கள் பணியில் சித்தமருத்துவ-ஆயர்வேத யுணானி-மருத்துவ(கற்ப-வாத-ரண சம்மந்தமான) ஓலைச்சுவடிகள் 08 வைத்துள்ளார.; அத்தோடு பாளி மொழியில் உள்ள ஒரு ஏடும் வைத்துள்ளார் சின்னக்கடை மன்னார்.
  • திரு.மிக்கேல் கபிரியேல புனித மிக்கேல் பிரம்பும்(கோல்)புனித மிக்கேல் மாலை ஓலைச்சுவடியும் 60வருடங்களாக பாதுகாத்து வைத்துள்ளார.; 36 மருத்துவ ஓலைச்சுவடி வீடு இடிந்து விழுந்து மண்ணோடு கறையான் அரித்துள்ளது. தரவான்கோட்டை மன்னார்.
  • திரு.சக்கரியாஸ் செபஸ்ரியான் டயஸ் 1918ஆண்டு பழமையான “சூசையப்பர் வாசாப்பினை” ஓலைச்சுவடி 2018 இன்று வரை பாதுகாப்பாக வைத்துள்ளார். மழைகாரணமாக இரண்டு ஓலைச்சுவடிகளில் 2ம் இரவு நிகழ்வு 1நனைந்து முற்று முழுதாக சேதமடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. கடவுள் சித்தததால் ஏறகனவே இரண்டு ஓலைச்சுவடிகளையும் நூலுருவாக்கி வைத்ததால்.தாழ்வுபாடு மன்னார்.
  • மன்னார் பள்ளிமுனை புனித லூசியா அன்னை ஆலயத்தில் புனித லூசியா அன்னை வரலாற்று ஓடைச்சுவடியானது சந்த லூசியா எனும் பெயரில் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. நீண்ட காலப்பகுதியை கொண்ட ஒலைச்சுவடி இதனோடு அந்தோனியார் வாசாப்பு மற்றும் எம்பரதோர் நாடக ஓலைச்சுவடியும் இருந்துள்ளது.1964ம் ஆண்டு சு10றாவளியின் போது அழிந்துள்ளது அழிவுக்கு முன் நூலுருவாக்கம் செய்துள்ளனர்.
  • பள்ளிமுனை மேற்கு பகுதியில் சீமான் பிலோமினா எனும் பெண்மணியிடம் 75 வருடத்திற்கு மேல்பட்ட புனித மிக்கேல் சம்மணசானவர் ஓலைச்சுவடி மிகவும் அழிந்து சிறுதுண்டாக உள்ளது.
  • அவரது மகன் யோவான் மிக்கேல் மற்றும் ஊர்ப்பெரியவரான அந்தோனி றோச் அவருடன் இவ்வேட்டினை வாசிக்க கூடியவரான திரு இராசா ஜயா அவர்களிடம் வினவியபோது பள்ளிமுனை தனித்துவமான கிராமம் இருப்பினும் 1964ம் ஆண்டு ஏற்பட்ட சு10றாவளி 1990 ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் எமது ஓலைச்சுவடிகள் அழிந்துபோனது மிகவும் கவலையான விடையம் தான்.
  • திரு.அல்பிரட் தற்குருஸ் புனிதர் சந்தோமையார் ஓலைச்சுவடி 150வருட பழமையானது 1972 ஆண்டில் இருந்து பாதுகாத்து வருகின்றார். கட்டுக்காரன் குடியிருப்பு பேசாலை. மன்னார்.
  • திரு.விக்டர் ஜெயபாலன் செபஸ்ரியான் குருஸ் “மூவிராசாக்கள் வாசாப்பு எடு” முழுமையாக இல்லை வைத்துதுள்ளார் சென்.மேரிஸ் வீதி பேசாலை மன்னார்.
  • திரு.அவுறான் குருஸ் 1871ம்ஆண்டு எழுதிய மருத்துவஏடு அருளாநந்தம் அவுறான் மகள் ரெமியா குருஸ் காப்பாளர் ஓலைச்சுவடி கைமாறியுள்ளது. மருத்துவ நூல் உள்ளது.பேசாலை
பேசாலையில் S.A.மிராண்டா C.F.பெனாண்டோ S.A.உதயன் கீளியன் குடியிருப்பு ஞானமலர் கலைஞர்களிடமும் தலைமன்னார் திரு.விமலதாஸ் தலைமன்னார் கிராமம் மரியதாஸ் மடுத்தீன் திரு.யோகா போன்றவர்களிடம் வினவியபோது பேசாலை தலைமன்னார் கிராமங்களுக்கென்று தனித்துவமான பல ஏடுகள் இருந்தன வருடா வருடம் அரங்கேற்றங்கள் செய்திருக்கின்றார்கள் யுத்த இடம்பெயர்வு காரணமாக இந்தியாவுக்கு செல்லும் போது கோவிலில் பாதுகாப்பாக இருக்கும் என்று எல்லா ஏடுகளையும் வைத்துவிட்டு சென்றோம் திரும்பி வந்து பாரக்ககையில் சில ஏடுகள் அழிந்தும் சில ஏடுகள் காணாமலும் போயுள்ளது ஓலைச்சுவடிகள் மடடுமல்ல எமது முக்கிய ஆவணங்களும் தான்.

இன்னும் பலரிடம் ஓலைச்சுவடிகள் இருக்கின்றது அவர்கள் அதை வெளிப்படுத்தவும் விரும்பவில்லை பாரம்பரியமா இருப்பது பாதுகாப்பு கருதியும் சொல்ல முன்வருகிறார்கள் இல்லை   

பாதுகாப்பது எவ்வாறு…….
    ஓலைச்சுவடிகளை பாதுபாப்பாக வைத்திருப்பவர்களை ஊக்குவித்தலும் கௌரவித்தலும்.
  ஆழிந்து போகும் ஓலைச்சுவடிகளை மீள் நூலுருவாக்கம் செய்தல.
   பொதுவான ஒரு இடத்தில் எல்லா ஓலைச்சுவடிகளையும் ஒன்று சேர்த்து பாதுகாத்தல் வெளிப்படுத்தல்(உறுதி செய்யப்படவேண்டும் நம்பகத்தன்மை) 
இழந்தவைகள் இழந்ததாகவே இருக்கட்டும் இருப்பனவற்றினையாவது பாதுகாப்போம் இனி வருகின்ற இளையதலைமுறைக்கு எதைக்காட்டுவது இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இருப்பதை தெரியப்படுத்தி எமது பாரம்பரிய அரிய பெரியவிடையங்களை வெளிக்கொணர்வதற்கான செயற்பாடுதான் இது.

இச்செயற்பாடு மாவட்டம் பூராகவும் உள்ள ஓலைச்சுவடிகள் பற்றிய தேடலுக்கான முதற்படியே தொடரும்….. எமது பாரம்பரியம் பாதுகாத்து வெளிப்படுத்தினால் அவை எல்லோராலும் மதிக்கப்படும்.
அதற்கு ஒன்றிணைவோம் யாவரும்….


கவிஞர்.வை.கஜேந்திரன்-
















மன்னார் பிரதேசத்தில் மங்கிப்போகும் ஓலைச்சுவடிகள்.... Reviewed by Author on June 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.