அண்மைய செய்திகள்

recent
-

உங்கள் மதங்களை கௌரவிப்பதுபோல் பிறர் மதங்களுக்கும் கௌரவம் கொடுங்கள். மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க

தங்கள் தங்கள் மதங்களுக்கு கௌரவம் வழங்குவதுபோல் நீங்கள் மற்றயவர்களின் மதங்களுக்கும் கௌரவம் வழங்கினால் இந்த நாட்டில் பிரச்சனைகள் எற்பட வாய்ப்பு ஏற்படாது என் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பேரவை மாவட்ட சர்வமத குழு, மன்னார் மாவட்ட சர்வமத பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கமும் இணைந்து வியாழக் கிழமை (20.06.2019) மன்னார் நகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒன்பது மத
ஸ்தலங்களுக்கான நல்லெண்ண விஐயத்தை மேற்கொண்டது.

-மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மாவட்ட துயர்
துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் தலைவருமான அருட்பணி ஏ.சேவியர் குரூஸ்தலைமையில் முன்னெடுக்க்பட்ட நல்லெண்ண விஐயத்தின் நிகழ்வு ஒன்றில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்கவும் கலந்து கொண்டார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

ஒரு சில குழுவினால் ஏற்பட்ட பிரச்சனையினால் எமது நாட்டிற்கு அவலம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் சமாதானத்தை விரும்புகின்ற ஒரு குழுவாக நீங்கள் மத ஸ்தலங்களுக்கான நல்லெண்ண விஐயத்தை  மேற்கொண்டுள்ளீர்கள். இது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.

உங்கள் இந்த முயற்சியானது மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். பல நாடுகளில் பல இன மக்கள் பல விதமான மதங்கள் சார்ந்தவர்களாக வாழ்கின்றனர். இவர்கள் மதங்கள் சார்ந்த போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தாததால்  அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

சமாதானத்தை முன்னோக்கி நகர்கின்ற நீங்கள் உங்கள் மதத்தை எவ்வாறு
கௌரவிக்கின்றீர்களோ அவ்வாறு பிற மதங்களையும் நீங்கள் கௌரவிக்க வேண்டும். அப்பொழுது இந்த நாட்டிலே எந்த பிரச்சனையும் ஏற்பட வழி எற்பட
வாய்ப்புக்கள் இருக்காது.

நீங்கள் எடுத்திருக்கும் இந்த சமாதான நல்ல முயற்சி நாட்டுக்கு மிக
அவசியமானதில் ஒன்றாகும். சமாதானத்தின் பெறுமதியை உணர்ந்ததாலேயே நான் எனது வேலை பழுவுக்கு மத்தியிலும் உங்களுடன் இவ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.

இந்த மாவட்டத்தின் எந்தவொரு நல்ல முயற்சிக்கும் நான் உங்களுக்கு உதவி
செய்ய தயாராக இருக்கின்றேன். நீங்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி
இந்த மாவட்டத்தை நல்ல வளர்ச்சியில் கொண்டு செல்ல உதவிக் கரம் நீட்ட
வேண்டும் என வேண்டி நிற்கின்றேன் என்றார்.

உங்கள் மதங்களை கௌரவிப்பதுபோல் பிறர் மதங்களுக்கும் கௌரவம் கொடுங்கள். மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க Reviewed by Author on June 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.