அண்மைய செய்திகள்

recent
-

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு - குப்பைகள் இல்லாத நகரம்?


ஜப்பானில் உள்ள நகரம் ஒன்று குப்பைகளே இல்லாத நகரமாக மாறி வருகிறது. மேற்கு ஜப்பானில் உள்ள கமிகட்சு என்ற நகரில் 1,500 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நகரில் உள்ள மக்கள் கமிகட்சுவை குப்பைகளே இல்லாத நகரமாக மாற்ற முடிவெடித்துள்ளனர்.

இந்நகரில் வசிக்கும் மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை 45 வகையாகப் பிரித்து அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை அவர்களே தனியாகப் பிரித்துக் கொண்டு வருகின்றனர்.
அதன் பின்னர் கிடங்கு ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனி தனி அறைகளில், தேவையில்லாத பொருட்களை போட்டு சேகரித்து விடுகிறார்கள்.


இந்நகரில் தலையணை முதல் பிரஷ் வரை என அனைத்தையும் இங்குள்ள மக்கள் மறுசுழற்சி செய்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களும் இதில் அடக்கம். இதுவரை கமிகட்சுவில் இருந்து 80 சதவித குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டில் மட்டும் 286 டன் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டுக்குள் கமிட்சுவை குப்பைகளே இல்லாத நகரமாக மாற்றுவதே இவர்களின் இலக்கு என்று கூறப்படுகிறது.
இந்நகரில் வசிக்கும் இளைஞர் ஒருவர் கூறுகையில், ‘இது மிகவும் கடினமான ஒரு விடயம். நான் ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் இந்த நகருக்கு குடிபெயர்ந்தேன். இங்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான நாடு - குப்பைகள் இல்லாத நகரம்? Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.