அண்மைய செய்திகள்

recent
-

யுத்ததால் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம்.....



மான்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்த காலப்பகுதிகளிலும் அதன் பின்னரும் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட மக்களை சமூகம் சார் புனர்வாழ்வு ஊடாக மாற்றுத்திறனாளிகளை சமூகத்திற்குள் உள்வாங்கும் செயல் திட்டத்தின் கீழ் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் முகாம் நேற்று இடம் பெற்றது
மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பொதுவத்திய சாலையில் அணுசரணையில் VOICE அமைப்பின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயளாலர் S.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த மருத்துவ முகாமானது பள்ளமடு வைத்தியசாலை மற்றும் மாந்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமைனையில் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாமிற்கு மன்னார் பிராந்திய சுகாதார பணிபாளர் திரு.T.காண்டிபன் உட்பட மன்னார் மாட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த சுகாதார பொது பரிசோதகர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் 10 மேற்பட்ட வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இறுதி யுத்தத்ததில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த அனேக மக்கள் கால்,கைகளை இழ்ந்த நிலையிலும் குண்டுகளின் சில பாகங்கள் உடலில் அகற்றப்படாத நிலையிலும் உரிய உதவிகள் இன்றி தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுடைய மருத்துவ தேவைகளை அடைப்படையாக கொண்டு குறித்த மருத்துவ முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முகாமின் ஊடாக மாற்று திறனாளிகளாக காணப்படும் குறிப்பாக இறுதியுத்ததில் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்ற நிலையில் மாற்றுத்திரனாளிகளாக்கப்பட்ட 500 மேற்பட்டவர்கள் கலந்த்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மேலதிக மருத்துவ தேவைகள் உடையவர்களுக்கான விசேட ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.


யுத்ததால் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம்..... Reviewed by Author on June 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.