அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-வாயுமாசுபாட்டினை குறைப்பதற்காக உறுதி மொழியேற்பு...

பேண்தகு வணமுகாமைத்துவத்தின் மூலம் வாயு மாசுபாட்டினை குறைப்போம் எனும் தொணிப்பொருளில் உலகம் முழுவதும் நடை பெற்று வருகின்ற சுற்றாடல் தினத்தின் ஒரு அங்கமாக மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வும் விழிபுணர்வு நிகழ்வும் இடம் பெற்றது

மன்னார் வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட மன்/லூசியா மகாவித்தியாலயத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் பொறுப்பதிகாரி கலாநிதி.திருமதி.ராஜேஸ் கிமலதா தலைமையில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.S.குணபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாலர் திருமதி.சிவசம்பு கனகாம்பிகை அவர்களும் மன்னார் வலயகல்வி பணிப்பாளர் திரு.K.J.பிரட்லி அவர்களும் மன்னார் மடு வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் சுற்றாடல் தின ஆரம்ப நிகழ்வாக பேண்தகு வணமுகாமைத்துவத்திற்கு உதவும் வகையில் மரங்கள் பாடசலை வளாகத்தில் நாட்டிவைக்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆசிரியர்களினால் வாயு மாசுபாட்டினை குறைப்பதற்கான உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருந்தினர்களால் விசேட கருத்தமர்வும் இடம் பெற்றதுடன் கடந்த வருடத்தில் சுற்றாடல் சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாணவ மாணவிகளுக்கான பதக்கங்கள் சான்றிதல்கள் மற்றும் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.


















மன்னார்-வாயுமாசுபாட்டினை குறைப்பதற்காக உறுதி மொழியேற்பு... Reviewed by Author on June 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.