அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேசத்திற்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் போது திருக்கேதீச்சரப்பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்க காரணம் -நானாட்டான் பிரதேச சபையினரிடம் பொது அமைப்புகள் கேள்வி

திருக்கேதீச்சரம் மன்னார் பிரதேச சபைக்கு உரித்தான பகுதி அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மன்னார் பிரதேச சபையே பொறுப்பு திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அமைப்பது தொட்ர்பாக இரு மதங்களுக்கிடையிலான முரண்பாடானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று நீதி மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது
இந்த நிலையில் தி|ருக்கேதீச்சரப்பிரச்சனையின் அடி நுனி விளங்காத

நானாட்டான் பிரதேச சபை கடந்த வியாழக்கிழமை 20-06-2019
திருக்கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க கூடாது என்னும் பிரேரணையை  பதினான்கு உறுப்பினர்கள் இணைந்து ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதை  ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட  சைவ மக்களும் பொது அமைப்புகளும் தங்களது கண்டணத்தை தெரிவித்துள்ளார்கள்

நானாட்டான் பிரதேசத்தின் பொது அமைப்புகள் கருத்து தெரிவிக்கும் போது
நானாட்டான் பிரதேச சபையினரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடு இங்கு ஒற்றுமையாக வாழும் சைவ கத்தோலிக்க மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் செயல் எனவே நாங்கள் இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
அத்துடன் நானாட்டான் பிரதேசத்தில் தீர்க்கமுடியாத இடத்தில் குடிநீர்ப்பிரச்சனை உள்ளது அத்துடன் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இல்லை இதனால் கால்நடைகள் தொடர்ச்சியாக இறந்த வண்ணம் உள்ளது.சீரமைக்கப்படவேண்டிய உள்ளக வீதிகள் ஏராளம் உள்ளது அதிகரித்துப்போன மணல்அகழ்வால் அருவியாற்று நீர் உப்பாகிறது இவற்றை தடுத்து நிறுத்தவோ மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவோ.. இயலாத நானாட்டான் பிரதேச சபை எதற்காக இன்னுமொரு சபையின் நிர்வாகத்திற்குள் தலையிட்டு மத முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது .

இதுவரை நானாட்டான் பிரதேசத்தில் மத முரண்பாடுகள் எழுந்ததில்லை அப்படி ஒன்று நிகழ்ந்தால் அதற்கு நானாட்டான் பிரதேச சபைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நானாட்டான் பிரதேசத்தின் பொது அமைப்புகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தார்கள்

நானாட்டான் பிரதேசத்தின் சைவ ஆலயங்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கும் போது...
நானாட்டான் பிரதெச சபை சைவ மக்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை
நானாட்டான் பிரதெச சபை இன்று ஆட்சி அமைத்துக்கொண்டிருப்பது சைவ சைவ மக்களின் வாக்குகளின்லா மட்டுஆம என்பதனை சபையில் உள்ள எந்த உறுப்பினராவது மறுத்துச் சொல்ல முடியுமா  நடந்து முடிந்த பிரதேச சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ஏழு ஆசனங்கள் மட்டுமே அதில் வாழ்க்கைப்பெற்றான்கண்டல் இரட்டைத் தொகுதி பெருவாரியான சைவ மக்கள் வாழும் பகுதி இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொத்த சைவ வாக்காளர்களை கொண்ட பகுதியில் ஒரு நேரடி சைவ வேட்பாளரை நிறுத்தவில்லை நாங்கள் நம்பிக்கை அடிப்படையில் தான் கேள்வி கேட்கவில்லை   அந்த நம்பிக்கைக்கு நானாட்டான் பிரதேச சபையினர் துரோகம் செய்து விட்டார்கள் என்று நானாட்டான் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சைவ ஆலயங்களனின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தார்கள்.

பிரேரைணை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களை தொடர்பு கொண்ட கேட்டபோது

மேற்படி பிரேரணையை கொண்ட வந்தது ஐக்கியதேசிய கட்சி வங்காலை வட்டார உறுப்பினர்  ஒருவர்  கடுமையான விவாதித்தது  உதயசூரியன் கட்சியினர் அதில் கட்டையடம்பன் வட்டார உறுப்பினர் மரியசீலன் இந்த பிரேரணையை முற்றாக எதிர்த்தார்.  உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகம் தரவில்லை மிச்சம் இருந்த பதினான்கு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் அதாவது திருக்கேதீச்சரம் பகுதியில் இருமதத்தவரும் எந்த ஒரு வளைவும் அமைக்க கூடாது என்று தெரிவித்ததாகவும் அதற்கு நான் திருக்கேதீச்சரம் நமது சபைக்கு அப்பாற்பட்ட பிரச்சனை எனவே அது சம்பந்தமாக பேச தேவை இல்லை என்று சபையில் கூறியதாகவும் தவிசாளர் பரஞ்சோதி தெரிவித்தார்

தவிசாளர் கூறிய கருத்தினை நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்திய போது...
திருக்கேதீச்சரம் பகுதியில் அலங்கார வளைவு அமைக்கும் தேவை கத்தோலிக்க மக்களுக்கு இல்லை சைவ மக்களுக்கு மட்டுமே உள்ளது இரண்டு பகுதியினரும் வளைவு அமைக்கக்கூடாது என்று பிரேரணை நிறைவேற்றுவது  அப்பகுதியில் சைவ மக்கள் அலங்கார  வளைவு அமைத்துவிடக் கூடாது என்ற மதவாத சிந்தனையில் தான் என்பதை சிறு குழந்தைகளும் உணர்ந்து கொள்ளும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.



நானாட்டான் பிரதேசத்திற்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் போது திருக்கேதீச்சரப்பிரச்சனைக்குள் மூக்கை நுழைக்க காரணம் -நானாட்டான் பிரதேச சபையினரிடம் பொது அமைப்புகள் கேள்வி Reviewed by Author on June 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.