அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கத்திற்கு வடபகுதி மக்கள் எச்சரிக்கை -


வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கத் தவறினால், தேசிய ரீதியிலான பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடபகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வட மாகாணத்தில் இனங்காணப்பட்ட காணி பிரச்சினைகள் தொடர்பாக மாகாண மட்ட கலந்துரையாடல் ஒன்று யாழ்.பாடி விருந்தனர் விடுதியில் இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சார்ந்த பிரதிநிதிகள் வட மாகாணத்தில் காணப்படும் நில ஆக்கிரமிப்பு உட்பட காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்புமிக்கவர்கள் உரிய கவனத்தைச் செலுத்தி உடனடியான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனனர்.

கோரிக்கைகள்
2019.04.21ம் திகதி இலங்கையில் நடந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீள கையளிப்பதை மறந்து அரசாங்கம் இராணுவத்தை பலப்படுத்தி வருகின்றது.
எனவே அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு தனது பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது. எனவே பொறுப்புள்ள அரசாங்கம் என்றால் இது தொடர்பாக அதிக கவனத்தைச் செலுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நில உரிமையை உறுதிச் செய்வதற்கான சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வட பகுதியில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினைப் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான 171 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வயற்காணிகள் மற்றும் குடியிருப்பு காணிகளை சிங்கள மக்கள் தங்களுக்கு தர வேண்டும் என கோருகின்றனர்.
எனவே இது தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி தமிழ் மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பல காணிகளில் புத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளதோடு பல இடங்களில் மேலும் பல விகாரைகள் உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. (உதா. நீராவியடி, வட்டுவாகல், கொக்கிளாய், நாவற்குலி)
எனவே இது தொடர்பாக அரசாங்கம் சரியான ஆய்வை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுத்து எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் உருவாகக்கூடிய முரண்பாட்டை தீர்ப்பதற்கு சரியான தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், ஆலயங்கள் மீளவும் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
வட பகுதியில் காணப்படும் பல காணிகளை வனவளத் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் தமக்கு உரிய காணிகள் என உரிமைக் கோருகின்றன.

அரசாங்கம் திட்டமிட்டு வடபகுதி மக்களின் காணிகளை சூறையாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பாக விசேட கவனத்தைச் செலுத்த வேண்டும். அதேவேளை வட மாகாண ஆளுனர் தமது அதிகாரிகளைக் கொண்டு இதற்கான சிறந்த கள ஆய்வை செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலாவத்துறை மக்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி மற்றும் கொண்டச்சிகுடா 25 ஏக்கர் காணி உடனடியாக மக்களுக்கு மீள கையளிக்கப்பட வேண்டும்.

யாழ் வலி வடக்கு பிரதேசங்களிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு சொந்தமான 3918 ஏக்கர் காணிகள் இன்னமும் மீள கையளிக்கப்படாமல் இருக்கின்றமையினால் உடனடியாக இக்காணிகளை மக்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை இன்றுவரை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களை மீள குடியமர்த்துவதற்கான மற்றும் உப குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வடமராட்சி கிழக்கில் தேசிய பூங்கா என்ற போர்வையில் 49,000 ஏக்கர் காணி மற்றும் பறவைகள் ஒதுக்கிடத்திற்காக 20இ000 ஏக்கர் அபகரிப்பு நிலையில் உள்ளது. அரசாங்கம் இதை நிறுத்தி சாதகமான பதிலை மக்களுக்கு வழங்க வேண்டும்.
காணி அபகரிப்பு மற்றும் இடம்பெயர்வு காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்கள் பெண்கள். உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளையும் சந்திக்கின்றார்கள்.
எனவே மகளிர் விவகார அமைச்சு இது தொடர்பான கவனத்தைச் செலத்தி பெண்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பெண்களின் காணி உரிமையை உறுதிச் செய்ய வேண்டும்.

அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சமூகஇ பொருளாதாரஇ கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்ப தலைமைத்துவ பெண்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவைகளுக்கு சரியான தீர்வை அரசு வழங்கவில்லையெனின் நாம் அரசாங்கத்திற்கு சரியான பாடத்தை புகட்டுவோம் என்பதையும், தொடர் மக்கள் போராட்டத்தை மாகாண மட்டத்தில் மற்றும் தேசிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு வடபகுதி மக்கள் எச்சரிக்கை - Reviewed by Author on June 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.