அண்மைய செய்திகள்

recent
-

தற்போதைய அரசாங்கமானது ஸ்தீரனமற்ற நிலையில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை-மன்னார் நகர சபையின் தலைவர் S.Jஅன்ரனி டேவிட்சன்

நாட்டின் தற்போதைய அரசாங்கமானது ஒரு ஸ்தீரனமற்ற நிலையில் காணப்படுவதினால் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு   முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 16 ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இம் பெற்றது.

இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

அண்மையில் கல்முனையில் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருந்தது.
கல்முனை பிரச்சினையானது ஏற்கனவே பல்வேறு தரப்பினரினால் தெரியப் படுத்தப்பட்டிருந்தும் அதற்கான உரிய தீர்வு எட்டப்படாத நிலை காணப்பட்டது.

இதனால் குறித்த பிரச்சினை இன்று பாரிய பிரச்சினையாக மாறி இனங்களுக்கு இடையிலும்,மதங்களுக்கு இடையிலும் ஓர் பிரச்சினையாக மாறுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஒரு தெழிவான முடிவை எடுக்க முடியாத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பிரச்சினைக்கான முடிவு எடுக்கப் பட்டிருந்தால், இந்த நிலை எப்போதோ சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும்.

தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.எமது நகர சபையினை பொறுத்த மட்டில் நாங்கள்  நல்ல முறையிலே அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அனைவருடைய ஒத்துழைப்பும் எமக்கு பூரணமாக இருக்கின்றது.எதிர் காலத்திலே நகர சபையூடா அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும்,நகர சபை10டாக வேளைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அனைத்து உறுப்பினர்களுடைய பூரண ஒத்துழைப்பு எமக்கு தேவை என அவர் தெரிவித்தார்.

இதே வேளை கருத்து தெரிவித்த மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.மைக்கல் கொலின்,,,,

மன்னார் மாந்தை சந்தியில் உள்ள வரவேற்பு நுழைவாயில் தொடர்பில் தொடர்ந்தும் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது.குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வரவேற்பு நுழைவாயிலை மீண்டும் அமைக்க ஓர் அனுமதியை மன்னார் பிரதேச சபை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து சில தினங்களில் குறித்த வரவேற்பு நுழைவாயில் அமைப்பதை நிறுத்தச் செல்லியும் மன்னார் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த நடவடிக்கைகளானது மன்னாரில் மதங்களுக்கு இடையிலும், மக்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடிய செயற்பாடாக அமைந்துள்ளது.

மன்னார் பிரதேச சபை இனி வரும் காலங்களில் இவ்வாறு முடிவுகளை மேற்கொள்ளாது மக்களுடன் இணைந்தும், சர்வமத தலைவர்களுடன் இணைந்தும் இந்த பிரச்சினைக்கு ஓர் முடிவை மேற்கொள்ள வேண்டும்.

-இரு மதத்தவர்களும் ஒன்றினைந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு சிலர் அரசியல் இலாபத்திற்காக இந்த பிரச்சினையை பூதாகாரமாக்கிக் கொண்டு போகின்றனர்.

-இந்து மக்களாக இருந்தாலும் சரி,கிறிஸ்தவ மக்களாக இருந்தாலும் சரி இரு மத தலைவர்களும் ஒன்றினைந்து இந்த பிரச்சினையை ஒரு இனக்கப்பாட்டுடன் தீர்ப்பதற்கு இந்த நகர சபை உறுப்பினர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.








தற்போதைய அரசாங்கமானது ஸ்தீரனமற்ற நிலையில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை-மன்னார் நகர சபையின் தலைவர் S.Jஅன்ரனி டேவிட்சன் Reviewed by Author on June 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.