அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல் தீவில் தொடர்ந்தும் வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட குடும்பம்---மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு 7ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு மீள் குடியேறி சுமார் 10 வருடங்களை கடந்த நிலையில் இது வரை எவ்வித வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை எனவும், கிடைக்கின்ற வீட்டுத்திட்டங்கள் காரணம் இன்றி இடை நிறுத்தப்படுவதாகவும் கூறி மன்னார் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் யாக்கோப்பிள்ளை மதுரநாயகம் என்பவரே குறித்த முறைப்பாட்டை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நலன்புரி முகாமில் இருந்து விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தில் மீள் குடியேறியுள்ளார்.
மகள் ஒருவர் யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். மணைவி மற்றும் திருமணமான மகளுடன் மகளின் தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றோம்.
வீட்டுத்திட்டம் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வேறு தரப்பினருக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தேன். நான் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளேன்.
இந்த நிலையில் இனி வரும் வீட்டுத்திட்டத்தில் வீட்டுத்திட்டம் தரப்படும் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தினால் உறுதி மொழி வழங்கப்பட்டது.
ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் எனது பெயர் இல்லை.
இறுதியில் பிரதேசச் செயலாளிடம் கேட்ட போது உங்களுக்கு வீடு இருக்கின்றது.
புதிய வீட்டுத்திட்டம் தர முடியாது என தெரிவித்தார்.
என்னையும்,எனது மனைவியையும் திருமணமான மகளுடன் இருக்கும் படி அதிகாரிகள் கூறுகின்றனர்.என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக வீட்டுத்திட்டத்திற்கு அழைந்துள்ள நிலையில் எனக்கு வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ள சகல தகுதியும் காணப்பட்ட நிலையில் என்ன காரணத்திற்காக எனக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை? என தெரிய வில்லை.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.என வீட்டுத்திட்டம் கிடைக்காது பாதீக்கப்பட்ட விடத்தல் தீவு 7 ஆம் வட்டரத்தில் வசிக்கும் யாக்கோப்பிள்ளை மதுரநாயகம் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மனித உரிமைகள் ஆணைக் குழு மந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துளள்து.
குறித்த கடிதத்தில் இரு தடவைகள் வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியலில் குறித்த நபரது பெயர் இடம் பெற்று இறுதியில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.
இனி வரும் திட்டத்தில் விட்டுத்திட்டம் வழங்கப்படம் என்று பிரதேசச் செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டது.
இறுதியாக வெளிவந்த தெரிவில் அவருடைய பெயர் வெளிவரவில்லை என்றும் தான் வீட்டுத்திட்டத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே இவ்விடையம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் விடத்தல் தீவில் தொடர்ந்தும் வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட குடும்பம்---மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு... Reviewed by Author on June 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.