அண்மைய செய்திகள்

recent
-

130 பேரை கொன்ற பாரிஸ் தாக்குதல்தாரிக்கு 500 யூரோ பரிசு வழங்கிய பிரான்ஸ்: அதிர்ச்சியில் மக்கள் -


2015 பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்ற தீவிரவாதிக்கு, 500 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் எல்சா விகோரூக்கின் 'தி ஜர்னல் ஆஃப் ஃபிராங்க் பெர்டனின்' புத்தகத்தின் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபிராங்க் பெர்டனின் தீவிரவாதி சலா அப்டெஸ்லாமின் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 பாரிஸ் தாக்குதலை அடுத்து தலைமறைவான தீவிரவாதி சலா அப்டெஸ்லாம், 2016 மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸில் கைது செய்யப்பட்டார். பின்னர், பிரான்ஸ் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில உள்ள சலா அப்டெஸ்லாமை 24 மணிநேரம் கண்காணிப்பில் வைத்து, அவரது நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்யும் படி நீதி அமைச்சர் ஜீன்-ஜாக்ஸ் உர்வோயிஸ் உத்தரவிட்டார்.
2017 ஆம் ஆண்டு நீதி அமைச்சரின் உத்தரவை எதிர்த்து அப்தேஸமின் வழக்கறிஞர் ஃபிராங்க் பெர்டனின் வழக்கு தொடர்ந்தார். கண்காணிப்பு நடவடிக்கைகள் தனது கட்சிக்காரரின் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாக வாதிட்டார். எனினும், நாட்டில் புதிய தீவிரவாத தடைச்சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதாக வெர்சாய்ஸின் நீதிமன்றம் குறிப்பிட்டது.

எனினும், பெர்டனின் அடுத்தடுத்த சவாலைத் தொடர்ந்து, வெர்சாய்ஸின் நிர்வாக நீதிமன்றம், அப்டெஸ்லாம் கண்காணிக்கப்பட்டதை கண்டித்து. மேலும், இதனால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிக்கு அரசாங்கம் 500 யூரோ செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது, அதை அப்டெஸ்லாம் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
130 பேரை கொன்ற தீவிரவாதிக்கு 500 யூரோ வழங்க வேண்டும் என்ற பிரான்ஸ் நீதிமன்றத்தின் அறநெறியை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
a
130 பேரை கொன்ற பாரிஸ் தாக்குதல்தாரிக்கு 500 யூரோ பரிசு வழங்கிய பிரான்ஸ்: அதிர்ச்சியில் மக்கள் - Reviewed by Author on July 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.