அண்மைய செய்திகள்

recent
-

மன்-ஆண்டாங்குளம் பாடசாலையில் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 02கட்டிடங்கள் திறந்து வைப்பு-படம்

'அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை' எனும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களுக்கான திறப்பு விழா நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை 12-072019 மதியம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-ஆண்டாங்குளம் பாடசாலையில் இடம் பெற்றது.

ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையம்  மற்றும் இடை நிலை விஞ்ஞன ஆய்வு கூடம்  ஆகியவை வைபவ ரீதிய திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை12-07-2019  மன்-ஆண்டாங்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.பு.அந்தோனிப்பிள்ளை தலைமையில் இடம் பெற்றது.

யுத்ததால் நேரடியாக பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலையின்  கட்டிடங்கள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில் கல்வி அமைச்சின் பங்களிபில் குறித்த பாடசாலைக்கான கட்டிடங்கள் 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு  அமைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை  மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண பொறியியலாளர், மடு உதவி கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்-ஆண்டாங்குளம் பாடசாலையில் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 02கட்டிடங்கள் திறந்து வைப்பு-படம் Reviewed by Author on July 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.