அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைப்பு-(படம்)

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தால் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு  மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட வண்ணா குளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது.

போரினால் கணவனை இழந்த பெண்கள்,கைவிடப்பட்ட பெண்கள்,வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் குறித்த உணவகம் மற்றும் கற்றல் வள நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தலைவர், ப்ரிஜிங்லங்கா ஊழியர்கள் உட்பட அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகஸ்த்கர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கற்றல் வள நிலையத்தின் ஊடாக வேலை வாய்பை பெற்ற பெண்களுக்கு கணனி மற்றும் சமையல் தொடர்பான கற்கை நெறிகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கில் ஆரோக்கியா உணவகம், கல்வி நிலையம் திறந்து வைப்பு-(படம்) Reviewed by Author on July 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.