அண்மைய செய்திகள்

recent
-

போரால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை புண்படுத்தாதீர்கள் -


விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதைப் பெருமையாகக் கொண்டவர்கள் நம் மத்தியில் ஏராளம் பேர் இருந்தனர்.
அதேநேரம் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு மானசீகமான ஆதரவு வழங்கிக் கொண்டு அமைதியாக இருந்தவர்களும் உண்டு.

இன்னும் சிலர் தத்தம் பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பி விட்டு, பிறர் பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பும் வேலையிலும் ஈடுபட்டிருந்தனர்.
தவிர, இன்னும் சிலரோ சிற்றூரவை, வட்டவை என்பவற்றில் இணைந்து தங்களைப் பலமானவர்களாக மற்றவர்களுக்குக் காட்டி தங்கள் அலுவல்களை நிறைவேற்ற முற்பட்டதுமுண்டு.

இவை தவிர, விடுதலைப் புலிகளின் இறுதிக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தும் இணைந்தும் நடப்பதுபோல நடித்து புலிகளுக்கு தலையையும் அரசாங்கத்துக்கு வாலையும் காட்டிய விலாங்கு அரசியல்வாதிகளும் இருந்தனர்.
என்ன செய்வது மண் விடுதலைக்காக நடந்த நீண்டகாலப் போராட்டத்தில் அரசியல் பலமும் தேவை என்று கருதியதன் காரணமாக விடுதலைப்புலிகள் தமிழ் அரசியல் தரப்பையும் போராட்டத்தின் ஓர் அங்கமாக ஆக்க நினைத்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் அதி சிறந்த நடிப்பினால் விடுதலைப் புலிகளும் அவர்களை நம்பி ஏமாற்றமடைகின்ற நிலைமைக்கு ஆளாக வேண்டியதாயிற்று. இவை ஒரு சிறு குறிப்பு மட்டுமே.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. அவர்களோடு இணைந்து போராடியவர்கள், முன்னாள் பேராளிகள் என்ற பெயரோடு தம்பாட்டில் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளோடு நெருங்கிய தொடர்பை வைத்திருப்பது பெருமை என்றிருந்தவர்கள் எல்லாம் இப்போது முன்னாள் போராளிகளை, மாவீரர் குடும்பங்களைத் திரும்பியும் பார்ப்ப தில்லை.
இதுதான் உலக நியதி என்றாயிற்று. சரி பரவாயில்லை, உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ற பாடல் வரிகள் கூறும் தத்துவம் யதார்த்தமாகியுள்ளது.
கடந்த 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின்போது தமிழரசுக் கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் காணாமல்போனவர்களின் உறவுகளைக் கீழ்த்தரமாகப் பேசினர் என்று அறிந்தபோது இதயம் கருகிக் கொண்டது.
போராட்டத்தோடு, யுத்த இழப்புகளோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் கட்சி மாநாடு நடத்திக் கொண்டு; யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கீழ்த்தரமாகப் பேசுகின்றனர் எனில், இதைவிட்ட கொடுமை வேறு எதுவுமாக இருக்காது.

ஆகையால் யாராக இருந்தாலும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்கள் நோகும் வண்ணம் நடந்து கொள்ளாதீர்கள் என்பது தான் நம் தயவான கோரிக்கை.
- Valampuri-

போரால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை புண்படுத்தாதீர்கள் - Reviewed by Author on July 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.