அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இராணுவத்தளங்கள் அமைக்கும் எண்ணம் இல்லை! திட்டவட்டமாக மறுத்தது அமெரிக்கா -


இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
இலங்கையில் அமெரிக்கா தனது இராணுவ முகாம்களை அமைக்கும் திட்டத்தை அரங்கேற்றிவருவதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா 'படைகளின் நிலைப்பாடு' தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதுவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இலங்கையில் அமெரிக்க இராணுவ தளமொன்றை அமைக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ இல்லை.
இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான மதிப்பை வழங்கும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இராணுவத்தளங்கள் அமைக்கும் எண்ணம் இல்லை! திட்டவட்டமாக மறுத்தது அமெரிக்கா - Reviewed by Author on July 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.