அண்மைய செய்திகள்

recent
-

இணுவையூர் சக்திதாசன் எழுதிய 'தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும்'


ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவும், மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும்.
போருக்குப் பிந்திய தமிழர் தாயகத்தில் தகுதிமிக்க கலை, இலக்கிய நிகழ்வுகள் தொடராக இடம்பெற்று வருகின்றன. அதன் இன்னுமொரு அம்சமாக நூல் வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி என்பன இடம்பெற்றன.

டென்மார்க் வாழ் படைப்பாளி இணுவையூர் சக்திதாசன் எழுதிய 'தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும்' எனும் கதைகளும், கவிதைகளும் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவும், மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகின. பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரையும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி இடம்பெற்றது. பிற்பகல் 03.00 மணிக்கு நூல் வெளியீட்டு விழா ஆரம்பமானது. நிகழ்விற்கு வடமாகாண சுற்றுலாத்துறைத் தலைவர் க.தேவராஜா தலைமை வகித்தார். யோ.புரட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.


முன்னதாக நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கான வரவேற்பு இடம்பெற்றது. சுடர்கள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து இறை
வணக்கம் இடம்பெற்றது. ஆசிரியர் அனோசன் இறைவணக்கப் பாடலிசைத்தார். வரவேற்புரையினை ஏ.ரி.சி கல்வி நிறுவன அதிபர் இரா.அருட்செல்வம் வழங்கினார். நூல் அறிமுகவுரையினை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஞான. திருக்கேதீஸ்வரன் நிகழ்த்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் ம.இரகுநாதன், வலிகாமம் வடமேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வெளியீட்டுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.


நூலினை வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைக்க, டென்மார்க் வேல்முருகன் ஆலயத் தலைவர் அன்னலிங்கம் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. நூலின் ஆய்வுரையினை தமிழ்ப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ம.பா.மகாலிங்கம் ஆற்றினார். பிரான்ஸ் 'அறம்' கல்வி, பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் நூலாசிரியருக்கான கெளரவம் அளிக்கப்பட்டது. அத்துடன் காலையடி மறுமலர்ச்சி மன்றச் செயலாளர் அழகரட்ணம் பகீரதன் அவர்களுக்குமான கெளரவமும் அளிக்கப்பட்டது. 'அறம்'அமைப்பு சார்பாக வற்சலா துரைசிங்கம் இதனை நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து நிலாமுற்றம் சார்பில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும், சான்றிதழ் வழங்கலும் இடம்பெற்றது. முதலாம் இடம்: செல்வி.டனுசிகா புஸ்பராசா, யாழ்.இணுவில் இந்துக் கல்லூரி. இரண்டாம் இடம்: செல்வன் இந்திரபாலா கேதுஷன், யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரி. மூன்றாம் இடம்: செல்வன். இந்திரபாலா சேந்தன், யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி.
சாவகச்சேரி கலாசார உத்தியோகத்தர் எழுத்தாளர் கு.ரஜீபன், அவுஸ்திரேலியா கம்பன் கழகத் தலைவர் திருநந்தகுமார் ஆகியோரின் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன. நிகழ்த்தினார். ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் இணுவையூர் சக்திதாசன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டில் 'இயற்கை அமைப்பு', 'நிழல்கள் அமைப்பு' ஆகியன தமது சார்பாக கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சூழல் பாதுகாப்பிற்கு ஒத்துழைத்தன.

கனகசபாதி சக்திதாசன் என்ற இணுவையூர் சக்திதாசன் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியீடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.










இணுவையூர் சக்திதாசன் எழுதிய 'தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும்' Reviewed by Author on July 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.