அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கில் விகாரை அமைக்கும் நடவடிக்கைக்கு முழு உறுதுணையாக த.தே.கூட்டமைப்பு? -


நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உண்மையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்கின்ற அரசாங்கத்தினூடாக வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகள் புனரமைப்பு செய்வதற்காக பல ஆயிரம் மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்படுகின்றது. அந்த வரவு, செலவு திட்டத்தினூடாக ஒதுக்கப்படுகின்ற நிதியிலேயே இன்றைக்கு வடக்கு, கிழக்கிலேயே தமிழர்களின் பாரம்பரியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாவாக இருக்கட்டும் அல்லது செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயமாக இருக்கட்டும், யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுடைய பூர்வீகமான நினைவு சின்னங்கள் இருக்கும் இடங்களாக இருக்கட்டும் பிரதம மந்திரியும், அவர் சார்ந்த அமைச்சுக்கள் ஊடாகவும் விகாரை அமைப்பதற்கு முழுமூச்சாக இருக்கிறார்கள்.

இதற்கு முழு உறுதுணையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அதாவது கூட்டமைப்பில் இருக்கக்கூடிய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கு வரவு, செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதிக்கு முழு மூச்சாக ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கு ஆதரவளித்துவிட்டு இன்று அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும் வடக்கிலும், கிழக்கிலும் பௌத்த விகாரைகள் வருகின்றது என நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஆகவே இந்த விகாரைகள் அமைப்பதற்கு முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களே. இந்த வரவு, செலவுத் திட்டத்தை ஆதரித்ததனால் தான் இன்றைக்கு இந்த வடக்கு, கிழக்கிலும் பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணை என்பது வெறுமனே ஒரு நாடகம். மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் உண்மையாகவே வெற்றியளிக்காது என்று ஏற்கனவே தெரியும்.
அரசாங்கம் தற்சமயம் பலமாக இருக்கின்றது என்பதை தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலே காட்டி கொள்ளவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் முன்னணியும் ஒரு மையப் புள்ளியில் இருந்துதான் வேலை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் விகாரை அமைக்கும் நடவடிக்கைக்கு முழு உறுதுணையாக த.தே.கூட்டமைப்பு? - Reviewed by Author on July 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.