அண்மைய செய்திகள்

recent
-

நாம் மற்றவர்களுக்கு உதவிகரம் நீட்டும்போது எமக்கும் உதவிகள் பெறும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது உதவி செய்வதோடு அது நின்று விடாது நமக்கு உதவி பெரும் நிலையாகவும் மாறி விடுகிறது அத்துடன் இறைவனின் ஆசீரும் எமக்கு கிடைக்கப் பெறுகிறது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை  தெரிவித்தார்.
02-07-2019 செவ்வாய் கிழமை மன்னார் மறைமாவட்டத்தில் மருதமடு பெருவிழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

இந்த விழாவானது மரியாள் எலுசபேத்தம்மாளை சந்தித்த விழாவாக கொண்டாடுகின்றோம்.

இவர்களின் சந்திப்பு ஒரு மறை உண்மையாக இருக்கின்றது. அத்துடன் இவ் சந்திப்பானது எமக்கு பல சிந்தனைகளையும் தூண்டக்கூடியதாகவும் உள்ளது

இன்று மனிதர்கள் சந்தித்து கொள்ளுகின்றார்கள்.ஆனால் மனங்கள் சந்திப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது என்றும் இல்லாதவாறு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
நாம் இப்பொழுது ஈ மெயில் பேஸ் புக்,வட்சப் இவ்வாறான தொழில்நுட்பம் மூலம் மக்களை சந்தித்து வருகின்றோம். இதன் மூலம் பல மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களை சந்திக்கும் இவர்களில் சிலர்  அருகில் இருக்கும் தங்கள் குடும்பத்தார்களை சந்திக்காது வாழ்ந்து வருகின்றனர்.

தங்கள் குடும்பங்களின் இன்ப துன்பங்களை நோக்கரத இவர்கள் தூரத்தில் உள்ளவர்களுடன் இந்த அலைவரிசை மூலம் தொடர்பாடலில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் குடும்பங்களிலே வேலை தளங்களிலே அயலவர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளாது உறவைப் பலப்படுத்தாது பலர் இவ்வாறு அன்பை வளர்க்காது வாழ்கின்றனர்.

இது சமூக நன்மையா தீமையா என்பதை நாம் எமக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

இந்த நிலையில் மரியாள் எலுசபேத்தம்மாளை சந்தித்ததை நாம் தியானிப்போமானால் மரியாலும் எலிசபெத்தம்மாள் ஆகியோரின் சந்திப்பில் இருவரும் மகிழ்வு கொள்வதை நாம் பார்க்கிறோம்.

இருவர் சந்திக்கும்போது இவர்கள் கொண்ட மகிழ்ச்சி போன்று எம்மிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

எமதுமனங்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்த வேண்டும்.  அங்கே மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் இவ்வாறு நாம் சிறிய மாற்றத்தை கொண்டு வருகின்றபோது மனிதத் தன்மை மேம்படுகின்றன.

இரு கற்கள் ஒன்றாக இருக்கலாம் இவைகள் வருடந்தோறும் ஒன்றாக இருந்தாலும் மாற்றங்களை காண முடியாது அந்த கற்கள் கற்களாகவே காணப்படும்.

நாம் வர்ணங்களை எடுத்துக் கொண்டால் இரண்டு வர்ணங்கள் சேர்ந்தவிடன் வேறுபாடு கொண்ட நிறமாக தோன்றும்.  இவ்வாறு நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நாம் மற்றவர்களுக்கு நன்மையை உண்டாக்கி மகிழ்ச்சி கொண்டவர்களாக மாற வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது உதவி செய்வதோடு அது நின்று விடாது உதவி பெரும் நிலையாகவும் மாறி விடுகிறது

மூன்று மாதங்கள் மரியாள் எலிசபெத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தபோது அவள் எலிசபெத்தம்மாலுக்கு பல உதவிகளை செய்திருக்கலாம்.

அவ்வாறு பரிசுத்த ஆவியின் வரத்தால் கர்ப்பவதியான மரியாலும் அங்கு மன நிம்மதி அடைகின்றாள் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது நாமும் உதவி பெறுகின்றோம் இறைவன் ஆசீரும் எமக்கு கிடைக்கிறது இறைவன் எம்மை புது வாழ்வுக்கும் அழைத்து செல்லுகின்றார்

நாம் மற்றவர்களை சந்திக்கும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது எமது வாழ்விலும் நிறைவு ஏற்படுகின்றது. மாற்றம் ஏற்படுகிறது.

புனித அசீசீயார் இவ்வாறு கூறுகிறார் கொடுப்பதன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என்கிறார். இந்த வார்த்தை எமது வாழ்விலும் நிலை கொள்ள வழி செய்வோம்.  துன்பத்தில் இருப்போருக்கு நாம் எமது அன்பு கரத்தை நீட்ட தயாராவோம்

இன்று நீங்கள் அன்னையை சந்தித்து ஆசீர் பெற்று செல்ல வந்திருந்தபோதும் பலர் வர முடியாத நிலையில் நிலமை ஏற்பட்டுள்ளது. இறைவனின் இல்லத்தில் உயிர்த்த ஆண்டவரின் விழாவை கொண்டாடிய வேளையில் பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டன மதத்தின் பேரில் இவர்களை கொன்று விட்டார்கள்.

இவ்வாரான நிகழ்வு மக்கள் மத்தியில் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது இந்த இடத்தில் அன்னையை தரிசிக்க முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்காகவும் தீவிரவாதிகள் மனம் திரும்பவும் நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகவும் மரியன்னையிடம் வேண்டுவோம் என இவ்வாறு தெரிவித்தார் .


நாம் மற்றவர்களுக்கு உதவிகரம் நீட்டும்போது எமக்கும் உதவிகள் பெறும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை Reviewed by Author on July 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.