அண்மைய செய்திகள்

recent
-

தமிழினத்தை பெருந்துயரத்தில் மூழ்கவிட்ட உன்னத மனிதருக்கு மக்களின் இறுதி அஞ்சலி -


யாழ். மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தையாரான ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் கடந்த 11ம் கொழும்பில் மரடைப்பு நோய் காரணமாக தனது 74வது வயதில் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு குருக்கள், துறவிகள், இறைமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
மக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் முழுவதும் பூதவுடல் யாழில் வைக்கப்பட்டிருப்பதுடன், 15ம் திகதி திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கு அங்கிருந்து யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணிக்கு அங்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

யுத்தகாலத்தில் மக்களோடு மக்களாக இருந்து அருட்பணியுடன் அறப்பணியாற்றியவர். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் 2009இறுதி யுத்தகாலத்தில் வலைஞர் மடம்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது அரசபடையினால் நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
இதன்போது குறித்த ஆலயத்தில் அடைக்களமாகியிருந்த பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த சம்பவத்தை அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் நேரடியாக அனுபவித்ததோடு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்தார்.
மேலும் குறித்த தமிழ் இன அழிப்பு தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை இருந்து, ஐ.நா சபையில் குரல் கொடுத்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
மறைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரின் உடல், மாங்குளம் புனித. அக்கினேஸ் ஆலயத்தில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் அலையெனத் திரண்டு அருட்தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழினத்தை பெருந்துயரத்தில் மூழ்கவிட்ட உன்னத மனிதருக்கு மக்களின் இறுதி அஞ்சலி - Reviewed by Author on July 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.