அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-சட்டவிரோத கற்றாலை அகழ்வில் ஈடுபட்ட நான்கு நபர்களுக்கு அபராதம்

கடற்கரையோரத்தில் வளர்ந்திருந்த கற்றாலை என்ற மூலிகை தாவர செடிகளை வியாபார நோக்கில் அகழ்வு செய்த நான்கு நபர்களுக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  அபராதம் விதித்துள்ளார்.

மன்னார் வங்காலை கிராம பகுதியிலுள்ள கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட
கற்றாலை  செடியை வியாபார நோக்கில்  பிடுங்கிய  நான்கு
நபர்களை  கைது செய்த பொலிசார் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இவ் வழக்கு  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற
நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரனைக்கு

எடுக்கப்பட்டபோது நான்கு நபர்களும் தங்கள் குற்றங்களை எற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இவ் நான்கு நபர்களுக்கும் நீதவான் தலா ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

குறித்த வங்காளை பகுதியில் தொடர்சியாக சட்டவிரோத கற்றாளை அகழ்வு பணிகள் இடம் பெறுவதை தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையினால் அண்மையில் கற்றாலை அகழ்வுக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டு தடைவிதிக்கப்பட்டதுடன் குறித்த அகழ்வு பணியை தடை செய்தல் தொடர்பாக அறிவுப்புப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இவ்வாறான சட்டவிரோத அகழ்வுகள் தொடர்ச்சியக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.


மன்னார்-சட்டவிரோத கற்றாலை அகழ்வில் ஈடுபட்ட நான்கு நபர்களுக்கு அபராதம் Reviewed by Author on July 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.