அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! -


வீடுகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் ரசாயனப்பொருட்கள், பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான அளவில் காணப்படுவதாக The Commons Environmental Audit Committee (EAC) கவலை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி உலகிலேயே தாய்ப்பாலில் அதிக அளவில் ரசாயனம் கலந்திருக்கும் தாய்மார்களில் பிரித்தானிய தாய்மார்களும் அடங்குவர் என்றும் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.
1988ஆம் ஆண்டு வீட்டு அலங்கார பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே, அதிகம் பயன்படுத்தப்படும் சில தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள், மிகவும் மோசமானவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன.

அவற்றின் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பிய அறிக்கை ஒன்று, அந்த தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள் தீக்குள் விழுந்தால், நச்சுத்தன்மை கொண்ட புகையை வெளியிடும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து குரல் கொடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்த தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள் இப்போதும் நமது வீட்டில் அலங்காரப் பொருட்களில், குழந்தைகளின் மெத்தை முதல் சோபா வரையில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் கை கட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஜூலை 24ஆம் திகதி புதிய பிரதமர் பதவியேற்குமுன், 2016 தீ பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை அரசாங்கம் மீளாய்வு செய்வது குறித்து பதிலளிக்க வேண்டும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! - Reviewed by Author on July 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.