அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை! டக்ளஸ்mp கடும் ஆதங்கம் -


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா?
இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா?..
அதைவிடவும், புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனிதநாகரீக பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா... இல்லையா... என்று கேட்கிறேன்.

புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள் கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.
நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம். ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.
அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன். நீங்கள் வரவில்லை.
எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் உங்கள் சுயலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இன்று உயிருடன் இருந்திருப்பார்.
முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறந்து எதிர்ப்பை தெரிவித்தீர்களா? இல்லை.
அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.
ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். சவப்பெட்டி அரசியல் வாதிகளும். பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்கு கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்பு குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது தமிழ் மக்களையும் ஏமாற்றி உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேச தொடங்கியுள்ளார்கள்.
முப்பது வருடங்களாக போராடி எதை சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனை தியாகங்களை கொசைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.
அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் அந்த முப்பது வருட போராட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரபாகரன் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை! டக்ளஸ்mp கடும் ஆதங்கம் - Reviewed by Author on July 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.