அண்மைய செய்திகள்

recent
-

மறைந்தும் மறையாத மாணிக்கம்....நவரத்தினசாமி ஐயா


மறைந்தும் மறையாத மாணிக்கம்....

"தமிழ் வீரன் நவரத்தினசாமி நீந்திக் கடந்தார்" என்ற தலைப்பைத் தாங்கி, 1954 ஆம் ஆண்டு பங்குனி (March) மாதம் 27 ஆம் திகதி தினகரன் நாளிதளின் செய்தி, தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவரையும் ஒரு கணம் தலை நிமிரச் செய்திருக்கும். சாதனையாளன்....நவரத்தினசாமி ஐயா அவர்களது நினைவு நாளில் நியூ மன்னார் இணையத்தின் நினைவுப்பகிர்வு....

1909 அம் ஆண்டு ஆவணி (August) மாதம் 16 ஆம் திகதி தொண்டைமானாறு என்னும் வரலாற்றுப் பெருமை கொண்ட தலத்திலே பிறந்த நவரத்தினசாமி தனது அரம்பக் கல்வியை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், தற்போதைய தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயம்  உயர் தரக் கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் மேற்கொண்டார்.

பாக்கு நீரிணையை என்றாவது ஒரு நாள் நானும் நீந்திக் கடந்து சாதனையை நிலை நாட்ட வேண்டும் என்ற விருப்பு சிறுவயதிலேயே முளை விட்டிருந்தது.

பாடசாலை கல்வி முடிந்ததும் விவசாயத் திணைக்களத்தில் விவசாய விவரித்தல் (Expansion)  உத்தியோக்கராகக் கடமையை ஏற்றுக் கொண்டு; அந்தத் துறையிலும் தனது அர்ப்பணிப்புடனான சேவையை ஆற்றிவந்தார். விவசாய விவரித்தல் உத்தியோகத்தராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது அவர் பெற்றகள அனுபவங்களும், ஆய்வு ஊக்கமும் புதிய படைப்பாற்றல் ஒன்றுக்கான எண்ணக் கருவை வளர்த்து வந்தது. அவரது அயராத முயற்சியினால், விதை தூவும் இயந்திரத்தைக் கண்டு பிடித்து அரசின் பாராட்டுக்கனையும் பெற்றுக் கொண்டதுடன்,அதன் உரிமத்தையும் பெற்றுக் கொண்டார். விவசாயத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவார்ந்த ஆற்றலையும் இனங்கண்ட விவசாயத் திணைக்கள பணிப்பரளரால்,விவசாயப் பகுதி போதனாசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

விவசாயத் திணைக்களத்தில், போதனாசிரியராகச் சிறப்புடன் பணியாற்றி வந்த நவரத்தினசாமியின் ஆழ் மனதில், ஆழப் பதிந்துபோய் இருந்த, 'பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிய வேண்டும்' என்ற அந்த இலட்சிய வேட்கை மீண்டும் வெளிக் கொணரத் தொடங்கியபோது, தனது நீச்சல் பயிற்சியிலும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

அதன் விளைவாக 1954 ஆம ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் நாள் அவரது 46 ஆவது அகவையில், சுமார் 31 மைல் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் இறங்கிய நவரத்தினசாமியை கடல் கொந்தளிப்பு அச்சுறுத்தியது.  'இயற்கையுடன் எதிர்த்துப் போராட முடியாது' என்று, தனது 23 மணி 30 நிமிட கடல் பயணத்தை மனமில்லாது முடித்துக் கொண்டு வள்ளத்தில் ஏறினார்.கடல் நீரோட்டம் காரணமாக கடலில் மிதந்து நீந்திய தூரம் சுமார் 35 மைல் தூரம் இருக்கும். வல்வெட்டித்துறையில் இருந்து 31 மைல்களுக்குள் கோடியாக் கரையை அடைந்திருக்க வேண்டிய நவரத்தினசாமி இயற்கை ஒத்துழைக்க மறுத்ததால், 35 மைல்கள் தூரம் வரை நீந்தியும் கூட கோடியாக்கரையை அடைய முடியாது போனது அவரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

தனது இலட்சியத்தை அடைய முடியாமலே போய் விடுமோ என்ற துயரம் அவரை வாட்டி எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய உறுதி மட்டும் உரமெறிப் போய் இருந்தது.

மீண்டும் அந்த இலட்சியப் பயணத்தைத் தொடர்வதற்காக, 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பிறிபகல் 4.10 மணிக்கு, செல்வச் சந்நிதியானை வணங்கிக் கொண்டு, பாக்கு நீரிணையை முத்தமிட்டபடி கடலில் குதித்தார். பல இடர்களுக்கு மத்தியில் 1954 மார்ச் 26 மாலை 7 மணிக்கு 27 மணி நேரம் நீந்திய பின்னர் வேதாரண்யத்தை வந்தடைந்தார். அடுத்த நாள் காலையில் கோடியக்கரை, வேதாரண்யம், திருநெல்வேலி மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நவரத்தினசாமி மார்ச் 28 மாலை 6:30 இற்கு வல்வெட்டித்துறை வந்தடைந்தார்.

தனது 56ஆவது அகவையில் 1965 ஆம் ஆண்டில் அரச சேவையில் இருந்து இளைப்பாறினார். இளைப்பாறிய பின்னர் இவர் இலங்கையை கட்டுமரம் ஒன்றில் 760 மைல்கள் தூரம் கடலில் சுற்றி வருவதற்குப் பயிற்சி கொடுத்தார். 1969 ஜூன்  30 இல் இவர் காலமானார்.

மறைந்தும் மறையாத மாணிக்கம்....நவரத்தினசாமி ஐயா Reviewed by Author on July 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.