அண்மைய செய்திகள்

recent
-

சாப்பிடும்போது புரை ஏறினால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? -


பொதுவாக நம்மில் பலருக்கு சாப்பிடும் போது எந்தகாரணமும் இன்றி புரை ஏறுவது வழக்கம் ஆகும்.

இது உண்மையில் சாப்பாட்டில் கவனம் இல்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, அரட்டை அடித்துக்கொண்டு சாப்பிடுவது, சிரிப்பது, தண்ணீர் குடித்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவற்றால் சிலசமயம் உணவுக்குழாய்க்கு போகவேண்டிய உணவு, மூச்சுக்குழாயில் தவறாக சென்றுவிடும்.
அப்படி கலக்கும்போதுதான் உணவு தொண்டைக்கும் மூச்சுக்குழலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, மூச்சுவிட முடியாமல், நமக்கு புரை ஏறுகிறது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் புரை ஏறியவுடன் நாம் என்ன வேண்டும்? என்ன செய்ய கூடாது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
புரை ஏறும்போது என்ன செய்ய வேண்டும்?
  • புரை ஏறிய சமயத்தில், முன்பக்கம் நோக்கி குனியவைத்து, மேல் முதுகை மட்டுமே, மெதுவாக தட்ட வேண்டும். இது மூச்சுப்பாதையில் உள்ள உணவு, வெளியேற வாய்ப்பாக அமையும்.
  • புரை ஏறியவரின் வயிற்றில் நாபிக்கு மேல்புறம், கை முஷ்டியால் சற்று வேகமாக குத்தினாலும், சிக்கிக்கொண்டிருக்கும் உணவுப்பருக்கை வெளியேறிவிடும்.
  • புரை ஏறும்போது உண்டாகும் பதட்டத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் உடனே அவரை மல்லாக்க படுக்க வைத்து நாபிக்கு மேல், நாடு வயிற்றில், கை விரல்களை மடக்கி, மெதுவாகக் குத்தினாலும், சுவாசப்பாதையில் சிக்கிய உணவு, வெளியேறும்.
  • புரை ஏறும்போது உண்டாகும் பதட்டத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் உடனே அவரை மல்லாக்க படுக்க வைத்து நாபிக்கு மேல், நாடு வயிற்றில், கை விரல்களை மடக்கி, மெதுவாகக் குத்தினாலும், சுவாசப்பாதையில் சிக்கிய உணவு, வெளியேறும்.
  • கற்பூரவல்லி தைலம் அல்லது யூகலிப்டஸ் தைலத்தை நுகர்ந்து பார்ப்பதன் மூலமும், மூச்சுப் பாதையில் இருந்து, உணவை வெளிவரவைக்க முடியும்.
  • நம் வயிற்றை சாய்க்கக்கூடிய அளவில் உள்ள மேஜை அல்லது நாற்காலியின் முனைப்பகுதியில், நாபிக்கு சற்று மேலேயுள்ள நடுப்பகுதியை, வைத்து அழுத்தி வர, மூச்சுப் பாதையில் சென்று அடைத்த உணவுத் துணுக்குகள், வெளியில் வந்து விடும். சுவாசமும் சீராகும்.
  • தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளை சிரிக்க வைப்பதையோ, கவனத்தைத் திசைதிருப்புவதையோ தவிர்க்க வேண்டும், அப்படி செய்யும்போது, பால் மூச்சுப்பாதையில் புகுந்து, புரை ஏறிவிடும். இதற்கு, குழந்தையை முன்பக்கம் இலேசாக குனியவைத்து, மேல் முதுகில் தட்ட, அடைத்துக்கொண்ட பால் வெளியேறும்.
  • சில தாய்மார்கள் படுத்துக்கொண்டே குழந்தைக்கு பாலூட்டுவார்கள். இது மிகவும் தவறான ஒரு முறையாகும், இதனால் குழந்தையின் வாய்வழியே காற்று புகுந்து, காற்றோடு கலந்த பாலால், குழந்தைகளுக்கு புரை ஏறுகிறது.
புரை ஏறும்போது என்ன செய்ய கூடாது?
புரை ஏறினால் நாம் எல்லோருமே முதுகை வேகமாகத் தட்டிக் கொடுப்பது வழக்கம்.
ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. புரை ஏறியவரை நேராக நிற்க வைக்க வேண்டும், புரை ஏறும் சமயத்தில் முதுகில் ஓங்கி குத்தினால், மூச்சுப் பாதையில் சிக்கிய உணவு, முற்றிலும் மூச்சை அடைத்து, உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும்.



சாப்பிடும்போது புரை ஏறினால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? - Reviewed by Author on July 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.