அண்மைய செய்திகள்

recent
-

கலைஞர்கள் கலைப்பணியாற்றி கலை வளர்த்து பின்பு காணமல் போய்விடுகின்றார்கள்---செ.பிலிப்பு சிங்கராசா


கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில்; நாட்டுக்கூத்துக்கலைஞரும் நாடக நெறியாளரும் முதலமைச்சர் மற்றும் கலாபூஷண விருதுபெற்ற சுடர்கலைச்சோதி செபமாலை பிலிப்பு சிங்கராசா அவர்களின் அகத்திலிருந்து…

கலைஞர்கள் கலைப்பணியாற்றி கலைவளர்த்து பின்பு காணமல் போய்விடுகின்றார்கள்---யாரும் கண்டுகொள்வதில்லை காரணம் புரியவுமில்லை….

தங்களைப்பற்றி-
நான் தந்தையை சிறுவயதில் இழந்துவிட்டேன். எனது பிறிஸ்த்தம்மாள் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன் .உடலில் ஏற்பட் வருத்தம் காரணமாக தரம் 08டுடன் கல்வியை நிறுத்தி விட்டு விவசாயத்தினை மேற்கொண்டேன். தற்போது  இசைமாலைத்தாழ்வு முருங்கன் மன்னாரில் குடும்பத்தினருடன் சந்தோசமாக கலைச்சமூகப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

தங்களால் இயற்றி நெறியாள்கை செய்த நாடகங்கள் பற்றி…
1.    உயிர் காத்த உத்தமன்-நாட்டுக்கூத்து
2.    வீரவேந்தன்-நாட்டுக்கூத்து;
3.   சூழ்ச்சியின் வீழ்ச்சி;-நாட்டுக்கூத்து
4.    தியாகச்சுடர்-சரித்திர நாடகம்
5.    வீரமங்கை -நாட்டுக்கூத்து
6.    புதையல் ;-நாட்டுக்கூத்து
7.    சரிந்த சாம்ராஜஜியம்-நாடகம்
8.    செந் தீ-இசை நாடகம்
9.    விதியை வென்ற மதி;-நாட்டுக்கூத்து
10.    விஜன் சபதம் -நாட்டுக்கூத்து
11.   அமணன் குமணன்-நாடகம்
12.    ஓன்று பட்டால் உண்டு வாழ்வு-நாடகம்
13.    கீசகன் வதம்-நாட்டுக்கூத்து
14.    பாதுகை-நாட்டுக்கூத்து
15.    புதிய திருப்பம்-நாட்டுக்கூத்து;
16.    மயானம் காத்த மன்னன்-இசை நாடகம்
17.    கன்னி பெற்ற கடவுள் -நாட்டுக்கூத்து
18.    குருசு தந்த பரிசு-நாட்டுக்கூத்து
19.    கண்டி அரசன்-நாடகம்
20.    செத்துயிர்த்த செல்வன்-இசை நாடகம்
21.    கல்லறைக்கானம்-நாட்டுக்கூத்து;
22.    சாவை வென்ற சத்தியன் -நாட்டுக்கூத்து
23.    மறைகாத்த மங்கை;-நாட்டுக்கூத்து
24.    இராஜ ராஜ சோழன் ;-நாட்டுக்கூத்து
25.    கரம் வளர்த்த கன்னி;-நாட்டுக்கூத்து
26.    கடவுள் தந்த இரு மலர்கள்;-நாட்டுக்கூத்து
27.    குழல் வளர்த்த கோமகள்-நாட்டுக்கூத்து;
28.    இன்றைய உலகம்-நாட்டுக்கூத்து;
29.    அருள் மலர் ;-நாட்டுக்கூத்து
30.    காத்தவராஜன்-சிந்துநடை
31.    வணங்கா முடி;-நாட்டுக்கூத்து
32.    நல்ல தீர்ப்பு-நாட்டுக்கூத்து
33.    சவேரியார் ;-நாட்டுக்கூத்து
34.    யோசுவாஸ் ;-நாட்டுக்கூத்து
35.    சோதனை-சிந்து நடை
36.    மறைகாத்த மங்கை மற்றும் யோசுவாஸ் நாடகங்களை மடுக்கரையில் எனது சுகயீனத்திற்கு மத்தியிலும் 2017ம் ஆண்டு மேடையேற்றினார்கள் எனது முன்னிலையில் நான் மகிழ்ந்தேன்.

தங்களது கலையர்வம் பற்றி…
நான் சிறுவயதில் நன்றாக பாடுவேன் எனது குரல்வளத்தினால் பாடசாலையில் நடக்கின்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் என்னை இணைத்துக்கொள்வார்கள் நானும் ஆர்வத்துடன் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன் அப்படியே எனது நாடக ஆர்வம் படிப்படியாக வளர்ந்தது வளர்த்துக்கொண்டேன்.

தங்களது முதல் நாடகம் பற்றி---
எனது முதல் நாடகம் என்றால் 1967ம் ஆண்டு அது செம்மண்தீவில் இயங்கி வந்த கலைவாணிமன்றத்தின் நாடகமான  "மானம் பெரிது" எனும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்தேன். பின்பு ஒரு முறை பேரூந்தில் குழந்தை மாஸ்ரர் அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எனது நாடகத்தில் நடிக்கின்றீரா என்று கேட்டார் உடனே ஓம் என்றேன் அன்று 1968ல் தான் எனது கலையார்வத்திற்கு முத்தமிழ் கலாமன்றத்தில் இணைந்து "பரதேசி மகன்-கூட்டுறவே நாட்டுறவு-நல் வாழ்வு " 03 நாடகங்ளில் நடித்தேன் அதனால் தொடர்ச்சியாக நடித்தேன். பல நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளேன்.

தங்களது கலையார்வச்செயற்பாடுகள் பற்றி…

  • நாட்டுக்கூத்து கலைஞரான நான்
  • நாடக நெறியாள்கை
  • நாடக ஒப்பனை
  • பாடகர்
  • பக்கவாத்தியம்-ஆர்மோனியம் வாசிக்கும் ஆற்றுல் உண்டு.
  • வில்லுப்பாட்டு கதாப்பிரசங்கம் போன்றவை  எழுதிக்கொடுத்துள்ளேன்.
நானாட்டான் கிராமத்தில்  ஒரு சில ஊர்களைத்தவிர அனைத்து ஊர்களுக்கும் சென்று நாடக ஒப்பனைக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் நெறியாள்கையும் செய்துள்ளேன் தொடர்கின்றது பணி.

தங்களால் உருவாக்கப்பட்ட கலை மன்றம் பற்றி---
நான் 1968ம் ஆண்டு குழந்தை மாஸ்ரர் அவர்ளின் முத்தமிழ் கலாமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்தேன் அப்போததான் முத்தமிழ்க்கலாமன்றத்தின் செயற்பாடுகள் விதிமுறைகள் சட்டதிட்ட செயற்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இம்மன்றம் போல் எனது இசைமாலைத்தாழ்வு கிராமத்திலும் ஒரு மன்றம் உருவாக்க எண்ணினேன் அதன் விளைவாக உருவானதுதான்  இயல் இசை நாடக கலாமன்றம் அகும்.
எமது மன்றத்தின் முதல் நாடகமாக 1969-05-26 நானே கதை எழுதி உயிர்காத்த உத்தமன் நாடகம் மேடையேற்றினேன். அன்றிலிருந்து இன்றுவரை 50 ஆண்டு பொன்விழா கண்டுள்ள எமது மன்றமானது உறுப்பினர்களின் தொகை குறைந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிகழ்வுகள் செய்வோம். எமது இளைஞர் யுவதிகளின் நாடக ஆற்றலை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

நாடகம் அன்றும் இன்றும் எப்படியுள்ளது பற்றி…
அன்றைய நாடகங்கள் ஒரிராக்கதைகள் ஈரிராக்கதைகள் மூவிரவுக்கதைகளாக பெரிய நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் உள்ளன அதுவே மக்களின் பிரதான பொழுது போக்காக இருந்தது. அதுவும் எமது கிராமத்திற்கென தனித்துவமான நாடகம் உள்ளது. தற்போது தொலைக்காட்சி தொலைபேசியும் எமது சமூகத்தினை ஆட்கொண்டுள்ளது. என்ன செய்ய முடியும்…
நாடக அரங்கேற்றத்தில் மறக்கமுடியாத விடையம் பற்றி…
நான் எனது கதை நெறியாள்கையில் தரம் 05 மாணவர்களை வைத்து அமணன் குமணன் எனும் நாடகத்தினை கொண்டு மன்.முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில் வந்தோம் எனது கலைக்குருவான குழந்தை மாஸ்ரரும் சிலம்பின் சிரிப்பு எனும் நாடகத்தினைக்கொண்டு வந்திருந்தார்.
அவரின் நாடகமான சிலம்பின் சிரிப்பு முதல் நாடகமாக மேடையேற்றப்பட்டது  அவரது நாடகத்தில் மண்ணெண்னை தீபற்றி எரியும் காட்சியில் பாவித்த மண்ணெண்னை போத்தல் இருந்தது எமது நாடகம் மேடையேற்றப்படுகின்றது எமது நாடகத்தில் ஒரு காட்சியில் தண்ணீர் குடிக்க வேண்டும் அதுவும் சிறட்டையில் ஆனால் நான் மேடையில் தேடிப்பார்க்கின்றேன் சிறட்டை இல்லை ஒரு போத்தல் இருக்கின்றது அந்தப்போத்தலை தண்ணீர் போத்தல் என்று எடுத்துக்கொடுக்கின்றேன் அந்தமாணவணும் குடித்து விடுகின்றான் அப்போது அந்த மாணவனுக்கு புரையேறுகின்றது  நாடகம் பாராட்டினைப்பெற்றாலும் அந்த மாணவன் 01மாதம் நிமோனியா காச்சலினால் வைத்தியசாலையில் இருந்தார் அவர் வேறுயாருமல்ல தற்போது அருட்தந்தையாகவுள்ள ஜெயபாலன் அடிகளார் தான் அன்றிலிருந்து நான் மேடையேற்றும் நாடகங்களில் மிகவும் அவதானமாய் இருப்பேன் இவ்நிகழ்வானது இன்றும் என் நெஞ்சில் உள்ளது வாழ்நாளில் மறக்க முடியாத விடையம்.
   
தங்களின் நாடகத்தில் தங்களை அடையாளப்படுத்திய நாடகம் என்றால்…
அது உயிர்காத்த உத்தமன் நாடகம் தான் எனது முதலாவது நாடகம் தான் ஆம் 1மணித்தியாலம் 11/2 மணித்தியாலம் 3 மணித்தியாலம் ஓரிரவுக்கதையாக இப்படிபடிப்படியாக எழுதி மேடையேற்றினேன் மக்களின் வரவேற்றும் பாராட்டும் கூடிக்கொண்டே போனது பெரும் புலவர் எழுதியது போல இருக்கின்றது என்று சான்றோர் சொல்லக்கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் இந்த நாடகம் தான்
  • செட்டிகுள ஆலயப்பங்கு கட்டிட நிதிக்காக மேடையேற்றப்பட்டது.
  • இசைமாலைத்தாழ்வு அ.த.க.பாடசாலை கட்டிட நிதிக்காக மேடையேற்றப்பட்டது.
  • இரெட்டைக்குளம் யூதேயா ஆலயப்பங்கு கட்டிட நிதிக்காக மேடையேற்றப்பட்டது.
  • கற்கிடந்த குளம் அ.த.க.பாடசாலை கட்டிட நிதிக்காக மேடையேற்றப்பட்டது. இப்படியாக மக்களின் பாரிய வரவேற்பைபெற்ற நாடகமாக இருந்தது எனது அடையாளமாகவே மாறியது என்பதில் மகிழ்ச்சி.

1969ம் ஆண்டு தொடக்கம் 1980ம் ஆண்டுவரை நானாட்டான் பிரதேச DRO வாக இருந்த திரு சொக்கலிங்கம் ஐயா அவர்களின் பெரும் முயற்சியால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் உள்ள நாடக கலைஞர்களை ஒன்றினைத்து கலை விழா நாடகங்களை நடத்தினார் அதில் எனது உயிர்காத்த உத்தமன் என்ற நாடகத்தினையும் மேடையேற்றினேன் பரிசும் பெற்றேன். பெரும் வரவேற்பு பெற்றது.
  • 2009ம்ஆண்டு- கண்டி பேராதனைப்பல்கலைக்கழகத்திலும்
  • 2010ம் ஆண்டு யாழ்ப்பான தமிழ் விழாவிலும்
  • 2012ம் ஆண்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற இசைவிழாவிலும் கலந்து கொண்டு மன்னார் மாதோட்ட தோமையார் கூத்துருவை 03நாள் கண்காடசியாகவும் மேடையிலும் நடித்து பெயர்பெற்றோம்.


தாங்கள் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றிய நாடகங்களை நூல் வடிவாக வெளியிட்டுள்ளீர்களா…
இல்லை அந்த எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை காரணம் பொருளாதாரப்பிரச்சினையும் சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம் தற்போது எனது பிள்ளைகள் எனது  சுமார் 40 நாடகங்களையும் ஒன்றிணைத்து நூல்வடிவமாக வெளிக்கொணரவேண்டும் என்று கேட்டார்கள் கடவுளின் சித்தம் இருந்தால் அதுவும் நிறைவேறும் தற்போது முதிர்ந்த நிலையில் என்னால் முடியாது எனது பிள்ளைகளால்தான் முடியும் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம் தான்…

தங்களின் சேவைகளுக்கு பாராட்டி கௌரவித்த விருதுகள் பற்றி-
  • 2004ம் ஆண்டு கலைத்முறைக்கான சேவைக்காக மன்.நானாட்டான் பிரதேச கிராம மாதர் கிராம  அபிவிருத்தி சங்கங்களின் சமாசம் வழங்கிய பாராட்டுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்.
  • வடக்கு-கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கூத்துறைக்காக முதலமைச்சர் விருது 2014-11-02
  • 2011-0604 நாடக நெறியாள்கை மன்.நானாட்டான் வித்தியாலயம் வழங்கிய பாராட்டுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்.
  • 2010-05-16 உயிர்ப்பின் நம்பிக்கையில் திருக்காட்சியில் நடித்தமைக்காக  சமூக தொடர்பு இருட்பணி மன்றத்தினால் ஒப்பனைக்காக பாராட்டுச்சான்றிதழ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
  • கலாபூஷண விருது 15-09-2012 கலாசரா அமைச்சினால் கலைச்சேவைக்காக வழங்கப்பட்டது.
  • மன்னார் மாவட்டம் இளைஞர் ஆணைக்குழு “வித்துக்கள்” நாட்டுக்கூத்து கலைஞர்  விருது-2013
  • மன்னார் முருங்கனில் முத்தமிழ்க்கலா மன்றம் சுடர்கலைச்சோதி விருது-20-06-2014
இன்னும்…பல தற்போது ஆவணங்கள் கைவசம் இல்லை.


தங்களின் நீண்ட நாள் ஆசை பற்றி…
எனது நீண்ட நாள் ஆசை என்றால் எனது கலைப்பயணம் முடிவதற்குள் எமது ஊரில் திருப்பாடுகளின் காட்சியை மேடையேற்ற வேண்டும. 26-05-1969—26-05-2019 இந்த ஆண்டு எமது மன்றத்தின் 50 பொன்விழா ஆண்டு அதை வெகுசிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தோம். எமது பங்குத்தந்தையும் மக்களும் அவ்வேளையில் தான்21-04-2019  கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. அதனால் பங்குத்தந்தையின் அறிவுறுத்தலின் படி மேடையேற்ற விருந்த திருப்பாடுகளின் காட்சி மற்றும் சந்தோமையார் வாசாப்பு நாடகம் இரண்டினையும் செய்யவில்லை அடுத்த வருடம் கடவுளின் ஆசியோடு மேடையேற்றவேண்டும்.

தாங்கள் சேவையாற்றிய மன்றங்கள் பற்றி…
  • மன்னார்-திருமுறைக்கலாமன்றத்தின் உறுப்பினர்
  • இசைமாலைத்தாழ்வு கிராம முன்னேற்ற சங்க உறுப்பினர்-2016
  • இசைமாலைத்தாழ்வு அ.த.க பாடசாலை செயலாளர்
  • மாவிலங்கேணி அடைக்கலமாதா ஆலய பொருலாளர்
  • முத்தமிழ் கலாமன்றம்- உறுப்பினர் 1968
  • இவ்கலைச்சேவைகளில் இருந்து எனது முதிர்ச்சி காரணமாக விலகியிருக்கின்றேன்.
  • 2013ம் ஆண்டு 4-27 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்தினப்போட்டியில் நானாட்டான் மகாவித்தியாலத்தின் மாணவர்களை அழைத்து சென்று காத்தவராயன் சிந்துநடைக்கூத்து மேடையேற்றினேன்.
அத்துடன் பாடசாலை மாணவர்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம்-வவுனியா-திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்ற தமிழ்த்தினப்போட்டிகளில் கலந்துகொண்டிருக்கினறேன்

இளைஞர் யுவதிகளுக்கான தங்களது அறிவுரை---
எமது இளம்தலைமுறை… எமது பாரம்பரியங்களை பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு இளைஞர்களின் கையில்தான் உள்ளது. இந்த நவீனத்தில் நாம் எமது கலைகலாச்சாரபண்பாட்டினை இழந்துவிடக்கூடாது. பாரம்பரியம் இனிவரும் காலங்களிலும் தனித்துவமானதாக இருக்க இளைஞர் யுவதிகள் ஒன்றிணையவேண்டும்.


தங்களின் கலை வாழ்வில் மறக்க முடியாத மனிதர்கள் என்றால்…

பலர் உள்ளனர் முதலில் எனது இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது குடும்பத்தினருக்கும் அத்துடன் எனது கலைக்குரு என்றால் அது குழந்தை மாஸ்ரர் தான் அவர்தான் நாடகம் என்றால் என்ன எப்படி நடிக்க வேண்டும் நடிகர்கர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று நிறைய விடையங்களை கற்றுக்கொண்டேன். அத்துடன் எனது மாமா கொன்ரன்ரைன் தபால் ஊழியராக பணிபுரிந்தவர் மூத்த முத்து மாமா RDA பணிபுரிந்தவர் நாடகம் எழுது என்று ஊக்குவித்தவர் க.தமியான் இவர்கள் நால்வரையும் என்னால் என்றும் மறக்கவே முடியாது. பசுமையாக நினைவுகள்…

மன்னார் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும்
நியூமன்னார் இணையம் பற்றி…

முதல் தடவையாக நியூமன்னார் இணையத்தில் இருந்து வை.கஜேந்திரனாகிய நீங்கள்  செவ்வி கண்டுள்ளீர்கள். நல்லதொரு செயலாகும். எனது குடும்பமும் நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். எம்மைப்போன்ற கலைஞர்கள்;; இன்னும் மறைவாகவே இருக்கின்றார்கள் அவர்களையும் வெளிக்கொணரவேண்டும் எம்மைபற்றி முழுமையாக அறிந்து தெரிந்து வெளிப்படுத்தும் அரிய பணியாக உள்ளது
என்னை வெளிப்படுத்திய நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் என்றும்.


நியூமன்னார் இணையத்திற்காக சந்திப்பு-
கவிஞர் வை.கஜேந்திரன்-BA














கலைஞர்கள் கலைப்பணியாற்றி கலை வளர்த்து பின்பு காணமல் போய்விடுகின்றார்கள்---செ.பிலிப்பு சிங்கராசா Reviewed by Author on July 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.