அண்மைய செய்திகள்

recent
-

பிற மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வந்தவர்களாலேயே மன்னாரில் நல்லிணக்கம் சீர்குழைகின்றது-பிரதேச சபை உறுப்பினர் நீ.செபமாலை பீரீஸ்

மன்னார் மாவட்டத்ததை பிறப்பிடமாக கொண்டு மத நல்லிணக்கத்துடன் வாழும் மன்னார் மாவட்ட மக்களை வந்து குடியேறியுள்ள பிற மாவட்டத்தினரே மன்னாரில் நல்லிணக்கத்தை குழைக்கின்றனர் என சிறி லங்கா பொதுஐன பெரமுனை கட்சியைச் சார்ந்த மன்னார் பிரதேச சபை உறுப்பினர் நீ.செபமாலை பீரீஸ் இவ்வாறு
தெரிவித்தார்.

மாந்தை திருக்கேதீஸ்வர வளைவு சம்பந்தமாக மன்னார் பிரதேச சபை அவசரக் கூட்டம் ஒன்றை நேற்று வியாழக் கிழமை (04.07.2019) கூட்டியது.

இக் கூட்டத்தில் சிறி லங்கா பொதுஐன பெரமுனை கட்சியைச் சார்ந்த மன்னார் பிரதேச சபை உறுப்பினர் நீ.செபமாலை பீரீஸ் இங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் எம் மத்தியில் கட்சி, இன, மத வேறுபாடுகள் இருக்கக்கூடாது. இது கடந்த காலத்தில் எமது மாவட்டத்தில் கடப்பிடித்து வரப்பட்டதை நாம் கண்டுணர்ந்துள்ளோம்.

நாம் தேர்தலில் போட்டியிடும் காலத்தில் மட்டும் கட்சி வேறுபாடுகளை காட்டி
வந்தோம்.  சில தினங்களுக்குப் பின் இதுவும் மறைந்து விடுவது வழமையாகும். மன்னாரைப் பொறுத்தமட்டில் காலா காலாமாக இது ஒரு அமைதி பூங்காகவே காணப்பட்டு வந்தது. இலங்கையில் இருக்கும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமே  கத்தோலிக்கம், இந்து, முஸ்லீம் மக்கள் ஒன்றினைந்து வாழும் மாவட்டமாக இருக்கின்றது. இதையிட்டு நாம் முதலில் பெருமை அடைய வேண்டும்.

தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் பிரச்சனைகள் தலைதூக்குவது உள்ளுரை
பிறப்பிடமாகக் கொண்டு வாழும் மக்கள் மத்தியிலிருந்து உருவாகுவதில்லை. மாறாக பிற மாவட்டங்களிலிருந்து மன்னார் மாவட்டத்துக்கு வந்து
குடியேறியுள்ளவர்களாலேயே பிரச்சனைகள் தோன்றி வருகின்றது.

பிற மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள் தற்பொழுது எம் மத்தியில் நச்சு
விதைகளை விதைத்து வருகின்றனர். இந்த விடயத்தில் நாம் எல்லோரும் மிக
கவனமாக இருக்க வேண்டும். நான் 1981ம் ஆண்டு அரச வேலைக்கு சேர்ந்த பின்பு இவ்வாறான நச்சு விதை விதைப்பவர்களால் நாங்கள் பலர் பாதிப்பு அடைந்தவர்கள்.

அன்றைய துன்பங்களை நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். ஆகவே எம் மத்தியில் இன, மத வேறுபாடுகள் இருக்கக்கூடாது. வளைவு அமைப்பது ஒரு முக்கியமான விடயம் அல்ல. இந்த வளைவு அவசியம் அமைக்க
வேண்டும் என்பதும் அல்ல. அல்லது கட்டக்கூடாது என்பதும் அல்ல.

இந்த வளைவு கட்டினால்தான் அல்லது கட்டாவிட்டால் ஒருவரின் பக்தி இல்லாமல் போய்விடும் அல்லது பக்தர்கள் ஆலயம் வராமல் விடப்போவதுமில்லை. ஆனால் ஒரு சமய தலம் இருக்கும் இடத்தில் இன்னொரு சமய தலம் அமையும்போது அந்த சமயங்களுக்கு மத்தியில் மனதுக்குள் புழுங்கி பிரச்சனைகள் தலைதூக்குவது இயல்பே.

இவ்வாறான பிரச்சனைகள் தலைதூக்காதிருக்க விட்டுக் கொடுப்புடன்
மனிதாபத்துடன் செயல்படுவதே சிறந்தது. திருக்கேதீஸ்வர ஆலயத்தினர் அவ் பகுதியில் வளைவு அமைப்பதை நான் முற்று முழுதாக எதிர்க்கவில்லை.

ஆனால் அந்த இடத்தில் ஒரு சமய தளம் இருப்பதால் அந்த இடத்தை விட்டு சற்று தூரத்தில் அமைக்கும் பட்சத்தில் இரு சமயங்களுக்குமிடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு அமையும்.

அத்துடன் நான் தவிசாளருக்கு நன்றியும் கூறுகின்றேன். இரு
சமூகங்களுக்கடையே பிரச்சனைகள் தலைதூக்கக் கூடாது என்பதற்காக வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றமைக்கும் நன்றி நவிழ்கின்றேன் என்றார்.


பிற மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வந்தவர்களாலேயே மன்னாரில் நல்லிணக்கம் சீர்குழைகின்றது-பிரதேச சபை உறுப்பினர் நீ.செபமாலை பீரீஸ் Reviewed by Author on July 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.