அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான கழிவு!


பிரித்தானிய கழிவுகளை இறக்குமதி செய்ததன் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டிலிருந்தே இந்த கழிவுகள் வியாபாரம் இடம்பெற்று வந்திருப்பதாக அந்த கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற வைத்தியசாலைகளில் இருந்து ஒதுக்கப்படும் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து தகவல்கள் அம்பலமானதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்திருக்கின்றது.

இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பிலான விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், விசாரணைகளின் முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிகை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “கழிவுப்பொருட்கள் அடங்கிய கொல்களைன்கள் 200க்கு அதிகமானவை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இவை பிரித்தானியாவில் இருந்து வந்துள்ளதாகவும், சரியாக 220 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 102 கொள்கலன்கள் சுங்க திணைக்களத்தினால் துறைமுகத்தில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளன.
எனினும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்களில் 120க்கும் அண்ணளவான கொள்கலன்களை விடுவித்து கட்டுநாயக வர்த்தக வலைய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த கொள்கலன்கள் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆகவே இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான காலங்கள் இவை கண்டறியப்படாது இருந்துள்ளன. அதேபோல் இதனை மீள் சுழற்சி செய்யாது வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகள் எந்தவித முன் ஆய்வுகளும் நடத்தப்படாது கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் இதுவரை காலம் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளின் தொகை எவ்வளவு? இதில் எவ்வளவு தொகையான கழிவுகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனவா? என்பதை கூற வேண்டும்.
கொண்டுவரப்பட்டுள்ள கழிவுகளில் ஒரு தொகை குப்பைகள் மிகவும் சூட்சமமாக நாட்டுக்குள் பரப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலான நிலைமைகள் உருவாகும்.

கடந்த 2013ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கு அமையவே இந்த கழிவு வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுகளுடன் தொடர்புடைய வியாபாரத்தில் பிரதான சில நிறுவனங்கள் தொடர்புபட்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து இந்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான கழிவு! Reviewed by Author on July 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.