அண்மைய செய்திகள்

recent
-

தொடர் தும்மலால் பெரும் அவதியா?


மழைக்காலம் வந்துவிட்டால் போது சளியுடன் சேர்ந்து இருமல்,தும்மல் போன்றவற்றால் கஷ்டப்படுவதுண்டு.
தும்மல் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவகுக்கின்றது.

ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர்.
தும்மல் வருவதுபோலத் தோன்றும்போது நுரையீரலிலுள்ள காற்றை ஆழ வெளியேற்றுவதினால் தும்மலின்போது அழுத்தம் குறையும்.
சிலர் மூச்சை அடக்கி பத்துவரை எண்ணுவதுண்டு. மூக்கின் தண்டுப்பகுதியை அமுக்கிவிடுவதும் தும்மல் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடுமென நம்புகிறார்கள்.
அதனை தவிர்த்து தொடர் தும்மலிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
  • ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.
  • பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.
  • துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி ஆகியவற்றின் இலை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.
  • ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட தும்மல் குறையும்.
  • முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.
  • 1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
  • தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன்சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.
  • தூதுவளை பொடி, மிளகு பொடி, தேன் அல்லது பாலில் கலந்து குடிக்க தும்மல் நிற்கும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு சேர்த்து பொடியாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இடைவிடாத தும்மல் குணமாகும்.
  • இரண்டு தேக்கரண்டி அகத்திகீரை சாறுடன் இரண்டு தேக்கரண்டி அகத்தி பூ சாறை கலந்து, அந்த கலவையுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிடவும்.
தொடர் தும்மலால் பெரும் அவதியா? Reviewed by Author on July 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.