அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடலில் கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தால் விடுதலை.


தலைமன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது
செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படடிருந்த ஏழு இந்திய மீனர்களை
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா விடுதலை
செய்துள்ளார்.

கடந்த மாதம் 28ந் திகதி (28.07.2019) தலைமன்னார் கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தலைமன்னார்
கடற்படையினரால் கைது  செய்யப்பட்டிருந்த ஒரு இந்திய இலுவைப் படகில் வந்த ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யோசப் பர்ணாந்து (வயது 36), பெனிற்றோ (வயது 38), இஞ்சாசி (வயது 22),
சத்தியசீலன் (வயது 37), நாகராஜ் (வயது 42), சுப்பிரமணியம் (வயது 37)
முனியசாமி (வயது 49) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாக இருந்தனர்.

இவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்ற
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படடிருந்தபோது இவர்கள் முதலில் ஒரு
வாரம் தடுத்து வைக்கப்பட்டு பின் மேலும் மூன்று நாட்கள் தடுத்து
வைக்கப்பட்டனர்.

பின் இவர்கள் வியாழக் கிழமை (08.08.2019) மீண்டும் மன்னார் நீதவான்
நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஐர்படுத்தப்பட்டனர்.

1979 ம் ஆண்டு 59 ம் இலக்க வெளிநாட்டு மீன்பிடி களங்கள் சட்டத்தின் கீழ்
திருத்தப்பட்ட 2018 ம் ஆண்டு முதலாம் இலக்க கடற்தொழில் சட்டத்தின்
வெளிநாட்டு மீன்பிடி களங்கள் நான்காவது பிரிவை மீறிய குற்றச்சாட்டுக்கு
ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையையும்

இதே சட்டத்தில் ஐந்தாவது பிரிவில் இலங்கை எல்லைக்குள் பணிப்பாளர் அனுமதி பத்திரம் இன்றி மீன் இறால் பிடித்தமைக்கு மேலும் இரு வருட
ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து இவ் இந்திய
மீனவர்களை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா விடுதலை செய்தார்.

அத்துடன் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் 150 ரூபாவையும், இரண்டு கையடக்க தொலை பேசிகளையும் அவர்களிடம் கையளிக்கும்படியும் நீதவான் உத்தரவு இட்டதுடன்

இவர்களை வெளிநாட்டு ஆட்களை தடுத்து வைக்கப்படும் மீரியகம என்ற முகாமில் தடுத்து வைத்து இவர்களை இவர்களின் நாட்டுக்கு நாடு கடத்தவும் கட்டளை பிறப்பித்தார்.

மற்றும் தடுத்து வைக்கப்படும் கடற்தொழில் உபகரணங்களின் உரிமையாளர் அல்லது இவற்றை வாடகைக்கு அமர்த்தியிருந்தவரை நீதிமன்றுக்கு வருமாறு இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு மற்றும் இதன் பிரதியை மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கும் அறிவித்தல் வழங்கும்படி நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கட்டளை பிறப்பித்தார். இவ் வழக்கை 17.10.2019 வரை ஒத்திவைத்துள்ளார்.
தலைமன்னார் கடலில் கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தால் விடுதலை. Reviewed by Author on August 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.