அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்,நிர்வாக தெரிவுக்கு பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிப்பு-

மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் நாளை சனிக்கிழமை(24) மாலை மன்னார் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம் பெற உள்ள நிலையில்,குறித்த சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் நீண்ட காலமாக இடம் றொத நிலையில் காணப்பட்டதோடு,பல்வேறு மோசடிகளும் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக பல வருடங்களாக குறித்த சங்கத்தில் அங்கத்தவம் வகித்து சேவையில் ஈடுபட்டு வருகின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு விடையங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் புதிதாக பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதோடு,அவர்கள் சேவையில் ஈடுபட தரிப்பிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் நீண்டகாலமாக மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தற்போது உரிய தரிப்பிடம் வழங்கப்படாத நிலையில் புறக்கணிக்கப்பட்டு வருவதோடு,நாளை இடம் பெறவுள்ள மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவுக்கும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால் புதிதாக பணம் செலுத்தி சேவையை மேற்கொள்ள அனுமதி பெற்றவர்களுக்கும் பழைய உறுப்பினர்கள் சிலருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,நகர முதல்வர்,நகர சபை உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு பல தடவைகள் எடுத்துச் சென்றும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் இடம் பெறவில்லை.

எனவே மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் நாளை சனிக்கிழமை (24) மாலை இடம் பெறவுள்ள நிலையில் நீதியான முறையில் குறித்த நிர்வாக தெரிவு இடம் பெற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,நகர முதல்வர்,நகர சபை உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதீக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-மன்னார் நிருபர்-

(23-08-2019)


மன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்,நிர்வாக தெரிவுக்கு பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிப்பு- Reviewed by NEWMANNAR on August 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.