அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த உயர்தரம் பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில்  திங்கள் கிழமை  முதல் 05 08 2019 க.பொ.த  உயர்தரம் பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாடு முழுவதுமாக 03இலட்சத்து 25000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.. 05-08- 2019 தொடக்கம் 31-08-2019 வரை பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கான அறிவுறுத்தல்......
  • பரீட்சை மண்டபத்திற்கு நேரத்திற்கு செல்லுங்கள்
  • காலை 09 மணிக்கு முன் தமது இருக்கையில் இருக்கவேண்டும்
  • வழமையாக தரப்படுகின்ற 03 மணி நேரத்துடன் மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படுகின்றது.
  • தேவையற்ற உபகரணங்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்ல வேண்டாம்.
  • ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது  செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்  அல்லது கடவுச்சீட்டு பயன் படுத்தலாம்.
    இவை தவிர்ந்து பிரச்சினை உள்ள மாணவர்கள் 
  • பாடசாலை பரிட்சாத்திகள் தங்களது இரண்டு புகைப்படத்தில்  அதிபர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்லாம்.பரீட்சை எழுத முடியும்
  •  தனியார் பரிட்சாத்திகள் தங்களது இரண்டு புகைப்படத்தில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்லாம்.பரீட்சை எழுத முடியும்
  • பரீட்சை எழுதுவதற்கு தேவையான உபகரணங்கள்  கொண்டு செல்லல்
  • காலையில் நல்ல உணவினை  சாப்பிட்டு விட்டு வ்ருதல்(பசியோடு இருந்தால் பரீட்சை எழுத முடியாது)
  • பரீட்சை பரிசோதகர் சொல்லுகின்ற அறிவுறுத்தல்களை செவிமடுத்தல் விளங்கி கொள்ளுதல்.
  • பரீட்சை வினாத்தாளை நன்கு வாசித்தல் விளங்கிக் கொள்ளுதல்
  • தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவதுடன் தெரியாத வினாக்களினை மீண்டும் மீண்டும் வாசித்து விடை எழுதுதல் முயற்ச்சி செய்தல்.
  • வினாத்தாள்களில்  ஒவ்வொன்றிலும் பரீட்சை சுட்டெண்ணை சரியாக தெளிவான முறையில் எழுதுதல் வேண்டும்.
  • முறையற்ற விதத்தில் ஈடுபடவேண்டாம் ஈடுபட்டால் அரசாங்க பரீட்சைகள் எதுவும் 05 வருடங்களுக்கு எழுதமுடியாது.
குறிக்கப்பட்ட  நேரத்திற்குள் பரீட்சையினை எழுதி முடித்தல் சரிபார்த்தல்
பயமின்றி கலக்கமோ குழப்பமோ இன்றி வினாவினை வாசித்து விடை எழுதுங்கள் வெற்றி உங்களுக்கே....

உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான முதல்படி சரியாக பயன்படுத்துங்கள் நேரத்தினையும் காலத்தினையும்


"ஐயமின்றி பரீட்சை எழுதுங்கள்
அனைத்து மாணவர்களும் சித்திபெறுங்கள்"
உங்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.


க.பொ.த உயர்தரம் பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். Reviewed by Author on August 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.