அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் கல்வியின் எதிர்காலத்தோடு விளையாடும் மன்னார் மின்சார சபை

மன்னாரில் சும்மாவே மின்மினிப்பூச்சியாய் மின்சாரம்......  அதுவும் பரீட்சைக்காலம் என்றால் மின்னல் போல வந்துபோகும் மின்சாரம்
மின் தடை நிமிடத்திற்கு பார்த்தால் கின்னஸ் சாதனை படைக்கும் மன்னார் மாவட்டம்.

மன்னார் மாவட்டத்தில் வருடா வருடம் அரங்கேறும் நிகழ்வே சாதாரண தரம் புலமைப்ப்ரீட்சை உயர்தர பரீட்சைகள் ஆரம்பிக்கின்ற நேரத்தில் மின்சார தடை.

 5-8-2019 திகதி முதல்  31-08-2019 வரை உயர்தர(A-L) பரீட்சை நடைபெறவுள்ளது. இரவு ஏழு முப்பது மணி முதல் தற்போது வரை பல தடவைகள் மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருக்கின்றது.
தொடர்ச்சியாக வருடா வருடம் இந்த மின்சார தடை இந்த கால கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .

மன்னார் மாவட்டத்தில் பரிட்சை எழுதும் மாணவர்களை இலக்கு வைத்து அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் இந்த மின்தடை இடம்பெற்று வருவதாக மன்னார் மக்கள் தங்களுடைய கவலையினை தெரிவிக்கின்றனர் .

ஊடகங்கள் ரீதியாக பல தடவைகள் இந்த மன்னார் மாவட்டத்தில் இப்படிப்பட்ட நேரங்களில் மின்தடை இடம் பெறுவதை பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அரசியல்வாதிகள் தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை .

அதன் ஒரு அங்கமாகவே தினம் மன்னார் மாவட்டத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இரவு தங்களுடைய கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்ற போது மின்சாரம் திடீர் திடீரென தடைப்படுகின்றது.

 தற்போது முற்றாக மின்தடை ஏற்பட்டிருக்கின்றது.

 மன்னார் மாவட்ட மின்சார சபை அதிகாரிகளே
  • மன்னார் மாவட்டத்தின் கல்விவளர்ச்சியின் வீழ்ச்சிக்கு இதுதான் முதல் காரணமாய் உள்ளது.
  • மாவட்டத்தில் தொடர்ந்தும் இந்த கால கட்டத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருப்பது  என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை.???
  • தடைப்படுகின்ற மின்சாரத்தால் பெறுமதியான  மின்சாதனப்பொருட்கள் பல நாசமடைகின்றது.
  • அரசியல் பிரமுகர்கள் மன்னாருக்கு விஜயம் செய்யும் போது மின்சாரம் தடைப்படுவதில்லையே....
  • சில அரசியல் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது மின்சாரம் தடைப்படுவதில்லையே...
  • சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட நேரம் மின் தடை ஏன!
  • மாணவர்களின் கல்வியை திசைதிருப்புதல் விருப்பமின்மை.
  •  மின்சாரத்தினை நம்ம்ப்யிருக்கும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை எண்ணவாகும் சொல்லுங்கள்
  • கடந்த வருடம் வயர் மற்றும் மின்கம்பங்கள்  புதியவை மாற்றுவதாக சொன்னீர்கள் இன்னும் மாற்ற முடியவில்லையா.....???
  • மின் பிறப்பாக்கிகள் துப்பரவுப்பணி நடைபெறுகின்றது என்று சொன்னீர்களே இன்னும் முடியவில்லையா....???
  •  மன்னாரில் மின்க்சிவு என்றால் அல்லது மின் தடை என்றால் மன்னார் மின்சார சபைக்கு அழைப்பினை மேற்கொண்டால்  அவர்கள் சொல்லும் பதில் யாழ்ப்பாண மின்சார சபையின் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துங்கள் என்பார்கள் அவசரத்திற்கு அழைக்கும் போது நிலமையை எண்ணிப்பாருங்கள்
  • ஏன் மக்களின் குறைகளை கேட்டறியும் முறைப்பாட்டு அறையுடன் தனியான சேவையினையும் வழங்கும் காரியாலயம் அமைக்ககூடாதா....???
  • மின்சாரத்தினை நம்ம்ப்யிருக்கும் தொழிலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரம் நிலை எண்ணவாகும் சொல்லுங்கள்....
எனவே மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு வருடா வருடம் மின்சார சபையினால் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற அநீதிக்கு மக்கள் போராட்டம் ஒன்றே இறுதியான தீர்வு...

 மன்னார் மாவட்ட மின்சார சபை அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு..

 போராடித்தான் பெறவேண்டும் என்றால் போராடத்தானே வேண்டும் வேறு வழியில்லாத போது.
மன்னார்விழி 


மாணவர்களின் கல்வியின் எதிர்காலத்தோடு விளையாடும் மன்னார் மின்சார சபை Reviewed by Author on August 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.