அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி வேட்பாளர்கள் கோத்தபாய...சஜித்.... இரண்டும் கெட்ட நிலையில் தமிழ் மக்கள்


ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி வேட்பாளர் இவ் இரண்டு விடயங்களுமே அன்மைகாளமாக தமிழ் சிங்கள மக்களின் மத்தியிலும் ஊடகங்களின் பேசு பொருளாக காணப்படுகின்றது

இலங்கையின் முன்னனி கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நாடு பூராகவும் பல எதிர்பார்புக்கள் மத்தியில் பொது ஜன பெரமுன வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபாய ரஜபக்ஸ களம் இறக்கப்பட்டுள்ளார்

ஆனாலும் கோத்தாபாஜரஜபக்ஸவிற்றுகு ஈடு கொடுக்க போகும் மாற்று வேட்பாளர்யார் என்பது தொடர்பாக எனைய சிறுபான்மை கட்சியினர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னனியினருக்கும் பல்வேறு கேள்விகள் உள்ளது.

அதே நேரத்தில் சிறீலங்கா சுகந்திரகட்சியின் நிலைப்பாடு தற்போதுவரை கேள்விகுறியாகவே உள்ளது. அன்றாடம் முன்மொழியப்படு புது புது ஜனாதிபதி வேட்பாளர்களால் ஐக்கியதேசிய கட்சிக்குள் பல்வேறு குழப்ப நிலை தோற்றம் பெற்றாலும் கூட்டணியை அமைப்பதிலே கட்சியின் தலைவர் மும்முரமாக செயற்பட்டு கொண்டுருக்கினறார்.

இவ்வாரறான சூழலில் தேசிய கட்சிகள் அனைத்தும் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து திட்டமிட்டு மூளைசலவை செய்யும் செய்ற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான மூளைசலவை செயற்பாடுகளின் போது தமிழ் மக்கள் சரியாக செயற்பட்டாலும் அரசியல் வாதிகள் அந்தர் பல்டி அடிபது அண்மைகாலமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் சிறீலங்க பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ரஜபக்ஸ தான் வெற்றி பெற தமிழ் மக்களின் வாக்குகள் தேவை இல்லை என தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன செய்தி வெளியான சில நாட்களிலே அவ்வாறான பொய் செய்திகளை நம்பவேண்டாம் நான் வெற்றி பெற தமிழ் மக்களி ஓட்டுக்கள் தேவை என மறுப்பு தெரிவித்தார் கோத்தபாய

என்னதான் மறுப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்கள் இறுதி யுத்ததிலும் அதன் பின்னரும் நடந்த சம்பவங்களையும் வெள்ளைவான் கலாச்சாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் விடயங்கலையும் மறக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை எந்த அடிபடையிலும் பெரும்பான்மை தமிழ் மக்கள் மகிந்தவிற்கும் அவரது கட்சிக்கும் எதிரான நிலைப்பாட்டயே எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்

ஆனாலும் மகிந்தவிற்கும் கோத்தாபயவிற்கும் எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் போது எமது மாற்றுத்தெரிவு ஆரோக்கியமான ஒரு தெரிவாக இருக்குமா... என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயமாகும்.

மாற்று தெரிவாக தமிழ் அரசியல் வாதிகளால் அண்மைகாலமாக முன்மொழியப்பட்டுவரும் பெயர்தான் சஜித்பிரேமதாஸவாகும் ஐக்கிய தேசிய கட்சியே முன்மொழிவுகளை நிறுத்தி வைத்தாலும் செம்பு தூக்கும் எம் தலைமைகள் அண்மைகாலமாக   சஜீத்தை முன்மொழிவதை முதல் கடமையாக செய்துவருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஒரு மாதங்களில் மாத்திரம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகனால் சஜித் தமிழ் மக்களுக்கு தேவனாக வர வேண்டும் என கனகச்சிதமாக முன்மொழிவு செய்யப்பட்டது மறுபுறம் அடைகல நாதனால் சஜித் எங்களுக்கு வீடு தந்தார் வீடு தந்தவரை நாங்கள் மறப்பதில்லை அதே போல் வீடு தந்த சஜித்தை எங்கள் மக்கள் மறக்க மாட்டர்கள் எனவே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வீடு தந்தது இந்திய அரசாங்கம் என்பது தெரியாமல் நேரடியாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வின் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவினால் சஜித் பிரேம தாஸா ஜனாதிபதி  ஆனால் தமிழர் தீர்வு விடையத்தில் கவனம் செலுத்தி உடனடியாக செயற்படவேண்டும் என தெரிவித்தார்.

ஒரு சில தலைமைகள் சஜித்தை ஆதரிப்பதை ஆதாரப்படுத்தி விட்டனர் ஆனாலும் கோத்தபாயவிற்கு மாற்று தெரிவு சஜித் என்பது தமிழர்க்கும் தமிழ் மக்களின் எதிர்காள இருப்புக்கும் பொருத்தமானத என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை

அண்மைகாலமாக தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாஸாவிற்கு ஆதரவு இருப்பது போன்ற ஒரு விம்பம் திட்டமிட்டு வெளிக்காட்டப்படுகின்றது.
இவ்வாற வெளிப்படுத்தலின் மூலம் சிறுபாண்மை மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளாரக முன்னிலைப்படுத்தலை கணக்கச்சிதமாக செய்துவருகின்றார் சஜித்

அதே நேரத்தில் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் சஜித்தின் ஜனாதிபதி ஆசை வெளிப்படையாக தெளிவாகின்றது மக்களை ஈர்பதற்கான செயற்பாடுகளிலும் தமிழ் மக்களில் இளையோர் யுவதிகளில் அக்கறை இருப்பத்குபோல் காட்டிக்கொள்வதற்காக உள்ளூர் அரசியல் வாதிகளுடன் இணைந்து கால்பந்து விளையாடுவது கடல் குளிக்கபோவதாக தெரிவிப்பது பாதுகாப்பிற்கு வந்த அம்புலன்ஸ் வண்டியை திருப்பியனுப்புவது என நீண்டு கொண்டு செல்கின்றது சஜித்தின் அசரவைக்கும் நடிப்பு.

இவ்வாறனா நடிப்பிற்கு எம் பலம் பெரும் அரசியல் வாதிகளும்  அகப்பட்டுகொண்டார்கள் என்பதே உண்மை எது எவ்வாறோ தந்தை விடையத்தில் தமிழர்கும் சஜித்துக்கும் மிகப்பெரிய வன்மம் உள்ளது அவற்றை மறந்து தமிழர் விடயத்தில் கரம் கொடுப்பார என்பது நடைமுறையின் பின்னரே வெளிச்சம் எல்லாவற்றையும் மறந்து தமிழர்க்கு தீர்வை பெற்றுக்கொடுத்தால் எப்போதும் தமிழ் மக்களால் மறக்கப்படாத தலைவராக சஜித் மாறுவார் என்பது தின்மம்

கோத்தபாய ராஜ பக்ஸவிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் நாம் சஜித் தை ஆதரிப்பது ஏதோ ஒன்றை செய்வதற்காக ஏதோ ஒன்றிற்குள் விழுந்தற்கு சமனாகும்

இவாறான சமயத்தில் சஜித்திற்கு பதிலாக ஐக்கிய தேசிய முன்னனியில் இருந்து மாற்று வேட்பாளர் ஒருவர்முன்மொழியப்படுவதே எமது எதிர்கால இருப்பிற்க்கு தேவையானதாகும் ஏன் என்றால் கோத்தபாய ராஜ பக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிதளவேனும் நிறைவேற்ற பொருத்தமானவர்கள் அல்ல எனவே எல்லா தேர்தல்களையும் விட இவ் தேர்தல் தமிழ் மக்களை இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளிவிட்டது.

எனவே சஜித்தா கோத்தாவ என வரும் போது தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க போகின்றார்கள் என்பதே எமது எதிர்காலம்.
-Joseph Nayan-
ஜனாதிபதி வேட்பாளர்கள் கோத்தபாய...சஜித்.... இரண்டும் கெட்ட நிலையில் தமிழ் மக்கள் Reviewed by Author on August 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.