அண்மைய செய்திகள்

recent
-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை விமர்சிக்கும் ஆயர்கள் -


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக்கோரிக்கை, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஆயர்கள் மாநாடு கேட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆயர்கள் உட்பட்ட 14 மறைமாவட்ட ஆயர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

எனினும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்று ஆயர்கள் மாநாடு குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே மக்கள் மனங்களில் இன்னமும் பயம் குடிகொண்டிருப்பதாக ஆயர்கள் மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை விமர்சிக்கும் ஆயர்கள் - Reviewed by Author on August 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.